/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உலகளாவிய இஸ்லாமிய மாநாடு இன்று துவக்கம் உலகளாவிய இஸ்லாமிய மாநாடு இன்று துவக்கம்
உலகளாவிய இஸ்லாமிய மாநாடு இன்று துவக்கம்
உலகளாவிய இஸ்லாமிய மாநாடு இன்று துவக்கம்
உலகளாவிய இஸ்லாமிய மாநாடு இன்று துவக்கம்
ADDED : செப் 04, 2025 11:16 PM

பெங்களூரு,: இரண்டு நாட்கள் நடக்கும் உலகளாவிய இஸ்லாமிய மாநாடு, பெங்களூரில் இன்று துவங்குகிறது.
நாடு முழுதும் இன்று மிலாது நபி கொண்டாடப்படுகிறது. இது 1,500வது மிலாது நபி என்பதால், உலகளாவிய இஸ்லாமிய மாநாடாக கொண்டாட அகில கர்நாடக சன்னி ஜம்மே - உல் - உலாமா அமைப்பு முடிவு செய்தது.
மிலாது நபியை முன்னிட்டு, இரண்டு நாட்கள் நடக்கும், உலகளாவிய இஸ்லாமிய மாநாடு பெங்களூரு அரண்மனை வளாகத்தில் 1வது நுழைவுவாயில் பகுதியில் நடக்கிறது.
இந்த மாநாட்டில் இந்தியாவின் கிராண்ட் முப்தி ஷேக் அபுபக்கர் அகமது முஸ்லியார், ஏமன் சூபி துறவி ஹபீப் உமர் பின் ஹபீஸ், சவுதி அரேபியாவின் மதினா ஷெரீப்புகள் ஷேக் அப்துல்லா பகீர் அப்துல் கரீம், சையது அப்தான் அல் சமிரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
கர்நாடக அரசு சார்பில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், வக்பு அமைச்சர் ஜமீர் அகமதுகான், முதல்வரின் அரசியல் செயலர் நசீர் அகமது, எம்.எல்.ஏ.,க்கள் சிவாஜிநகர் ரிஸ்வான் அர்ஷத், சாந்திநகர் ஹாரிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டிற்கு பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 'முஸ்லிம் நாடுகளை சேர்ந்த மத தலைவர்கள் சுற்றுலா விசாவில் இந்தியா வருகின்றனர்.
சுற்றுலா விசாவில் நம் நாட்டிற்கு வருவோர், மத பிரசாரத்தில் பங்கேற்க முடியாது. ஆனால் மத பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்' என, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கூறி உள்ளன.
கூடுதல் பொறுப்பு முஸ்லிம் மாநாட்டிற்கு வெளியாட்களை அழைக்க வேண்டாம் என்று, மாநாடு ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளோம். வெளிநாடுகளில் இருந்து வருவோர் விசா விதிகளை மீறுகிறார்களா என்பதை, வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலக அதிகாரிகள் கண்காணிப்பர். விதிகளை மீறாமல் நாங்களும் பார்த்துக் கொள்வோம். மாநாட்டை அரசு கண்காணிக்கும். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை எந்த பிரச்னையும் இன்றி நடத்துவதில், எதிர்க்கட்சியை விட எங்கள் மீது 10 மடங்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. பரமேஸ்வர் உள்துறை அமைச்சர்