/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'தங்கபூமி'யில் நகராட்சி தேர்தல் நடக்குமா? 'தங்கபூமி'யில் நகராட்சி தேர்தல் நடக்குமா?
'தங்கபூமி'யில் நகராட்சி தேர்தல் நடக்குமா?
'தங்கபூமி'யில் நகராட்சி தேர்தல் நடக்குமா?
'தங்கபூமி'யில் நகராட்சி தேர்தல் நடக்குமா?

விரிவாக்கம்
நகராட்சி எல்லை 2000ம் ஆண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இவ்வேளையில் வார்டுகள் எண்ணிக்கை 35 ஆக உயர்த்தப்பட்டது. இதில், பெமல் நகர் 1, 2 என இரண்டு வார்டுகள்; தங்கச் சுரங்க குடியிருப்பு பகுதிகளில் இருந்த வார்டு எண் 3 முதல் 18 வரையிலான வார்டுகள்; நகராட்சி எல்லையில் இருந்த 17 வார்டுகள் இணைக்கப்பட்டன.
தாமதம்
கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு படி, இரண்டாம் கட்ட தலைவர், துணைத் தலைவர் தேர்தல் 2025 மார்ச்சில் தேர்தல் நடந்தது. இதனால், 22 மாதம் மக்கள் பிரதிநிதி இல்லாமல் கலெக்டர் தலைமையில் நகராட்சி செயல்பட்டது. லேட்டாக தேர்தல் நடந்ததால், இரண்டாம் கட்ட தலைவர் பதவி காலம் எட்டு மாதம் மட்டுமே உள்ளது. வழக்கமாக 2025 செப்டம்பரில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
வாடிக்கை
இதுவரையிலும் தங்கவயல் நகராட்சிக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டதே இல்லை. ஏதாவது ஒரு காரணத்தைக் காண்பித்து தேர்தல் தள்ளிப் போடப்படுவது வாடிக்கை. அதே யுக்தியை இம்முறையும் கையாளலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.