/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மீண்டும் அரசியலில் தீவிரமாகும் ரம்யா? மீண்டும் அரசியலில் தீவிரமாகும் ரம்யா?
மீண்டும் அரசியலில் தீவிரமாகும் ரம்யா?
மீண்டும் அரசியலில் தீவிரமாகும் ரம்யா?
மீண்டும் அரசியலில் தீவிரமாகும் ரம்யா?
ADDED : செப் 10, 2025 02:02 AM

நடிகையும் அரசியல்வாதியுமான ரம்யா, மீண்டும் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார். வரும் சட்டசபை தேர்தலில் பெங்களூரின் தொகுதி ஒன்றில் களமிறங்க தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னடத்தில், புனித் ராஜ்குமாருடன் அபி திரைப்படம் மூலமாக, திரையுலகில் நுழைந்தவர் ரம்யா. அதன்பின் பல வெற்றிப்படங்களை கொடுத்து, முன்னணி நடிகையானார். தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். 2012ல் காங்கிரசில் இணைந்தார்.
கட் சிக்கு வந்த மறு ஆண்டே, 2013ல் மாண்டியா லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, இவருக்கு காங்., சீட் கொடுத்தது. அதன்பின் நடிப்புக்கு முழுக்கு போட்டு, முழுநேர அரசியல்வாதியானார்.
க டந்த 2014ல் இவருக்கு சீட் கிடைத்தது என்றாலும், ம.ஜ.த., வேட்பாளர் புட்டராஜுவை எதிர்த்து, ரம்யாவால் வெற்றி பெற முடியவில்லை. அந்த தோல்விக்கு பின், அவர் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் பதவி கிடைத்தது. அந்த பதவியிலும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. தொடர் சர்ச்சைகளால் விலக நேரிட்டது. அதன்பின் காணாமல் போனார்.
சமூக வலைதளங்களிலும் அவர் தென்படவில்லை. அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், சொந்த தொழிலை கவனிப்பதாகவும் தகவல் வெளியானது.
திடீரென திருமணத்துக்கு அவர் தயாராவதாக தகவல் வெளியானது. கடந்தாண்டு பெங்களூரில் காட்சியளித்த ரம்யா, சொந்தமாக பட கம்பெனி துவக்கி, திரைப்பட தயாரிப்பாளர் ஆனார். சமீபத்தில், ஹாஸ்டல் ஹுடுகரு திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இனி அவரை திரையில் காணலாம் என, ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பெங்களூரு வடக்கில் ரம்யா களமிறக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின் குமாரசாமி எம்.பி.,யானதால், சென்னப்பட்டணா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், ரம்யாவின் பெயர் அடிபட்டது. ஆனால் போட்டியிடவில்லை.
இந்நிலையில், தீவிர அரசியலில் இறங்க அவர் விரும்புகிறார். காங்., நிகழ்ச்சிகள், கூட்டங்களில் அதிகமாக காணப்படுகிறார். சில நாட்களுக்கு முன்பு, ஹெப்பால் புதிய மேம்பாலம் திறப்பு விழாவில், முக்கிய விருந்தினராக பங்கேற்றார்.
வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூரின் முக்கியமான தொகுதியில் போட்டியிட, தன்னை தயார்ப்படுத்துவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
வரும் நாட்களில் தொகுதியில், கட்சி தொண்டர்கள், தலைவர்களுடன் ஆலோசனை நடத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -