Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இரண்டாம் திருமணம் செய்ய முயற்சி கணவனை செருப்பால் அடித்த மனைவி

இரண்டாம் திருமணம் செய்ய முயற்சி கணவனை செருப்பால் அடித்த மனைவி

இரண்டாம் திருமணம் செய்ய முயற்சி கணவனை செருப்பால் அடித்த மனைவி

இரண்டாம் திருமணம் செய்ய முயற்சி கணவனை செருப்பால் அடித்த மனைவி

ADDED : ஜூன் 08, 2025 10:30 PM


Google News
சித்ரதுர்கா : வரதட்சணை ஆசையால், இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முயன்ற கணவனை, மண்டபத்திலேயே பிடித்து செருப்பால் அடித்து, முதல் மனைவி பாடம் புகட்டினார்.

தாவணகெரே மாவட்டம், நாமதி தாலுகாவின், முஷேனாளா கிராமத்தை சேர்ந்தவர் தனுஜா, 30. சிக்கமகளூரு மாவட்டம், அரசிகெரே தாலுகாவின், திப்பகட்டா கிராமத்தில் வசிப்பவர் கார்த்திக் நாயக், 32.

பரஸ்பரம் காதலித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான சில நாட்களிலேயே, வரதட்சணை கேட்டு காதல் மனைவியை கார்த்திக் துன்புறுத்த துவங்கினார்.

கணவரின் தொந்தரவை தாங்க முடியாமல், தனுஜா தன் தாய் வீட்டுக்கு சென்று, பணம் வாங்கி வந்து கொடுத்தார்.

அப்போதும் திருப்தி அடையாமல், மேலும் பணம் வாங்கி வரும்படி நச்சரிக்கத் துவங்கினார். மனைவி வீட்டினரிடம் பணம் இல்லை என, கூறினர்.

வரதட்சணைக்காக, இரண்டாம் திருமணம் செய்து கொள்ள கார்த்திக் நாயக் முடிவு செய்தார்.

ஊருக்கு செல்வதாக கூறி சென்று, திருமண ஏற்பாடுகள் செய்தார். சித்ரதுர்கா நகரில் உள்ள காயத்ரி மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடக்கவிருந்தது.

இதுகுறித்து, எப்படியோ முதல் மனைவி தனுஜாவுக்கு தெரிந்தது. தன் பெற்றோருடன் திருமண மண்டபத்துக்கு வந்தார்.

தனக்கு துரோகம் செய்த கார்த்திக் நாயக்கை சட்டையை பிடித்து, செருப்பால் விளாசினார். மணப்பெண்ணின் குடும்பத்தினர் வெலவெலத்து, திருமணத்தை நிறுத்தினர்.

தகவல் அறிந்து மண்டபத்துக்கு வந்த சித்ரதுர்கா நகர் போலீசார், சூழ்நிலையை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us