/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாதனைகளை சொல்லாதது ஏன்? பா.ஜ.,வுக்கு காங்கிரஸ் கேள்வி! சாதனைகளை சொல்லாதது ஏன்? பா.ஜ.,வுக்கு காங்கிரஸ் கேள்வி!
சாதனைகளை சொல்லாதது ஏன்? பா.ஜ.,வுக்கு காங்கிரஸ் கேள்வி!
சாதனைகளை சொல்லாதது ஏன்? பா.ஜ.,வுக்கு காங்கிரஸ் கேள்வி!
சாதனைகளை சொல்லாதது ஏன்? பா.ஜ.,வுக்கு காங்கிரஸ் கேள்வி!
ADDED : மே 14, 2025 12:22 AM

பெங்களூரு : ''எங்கள் கட்சியின் சாதனைகள் குறித்து, பா.ஜ., தலைவர்கள் பேசியது இல்லை. அவப்பிரசாரம் மட்டும் செய்கின்றனர்,'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து, பா.ஜ., தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆனால் காங்கிரஸ் அரசு, இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்து, எதிர்க்கட்சியினர் பேசியதும் இல்லை; பாராட்டியதும் இல்லை.
விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், பால் விலையை அரசு உயர்த்தியது.
ஆனால் பா.ஜ.,வினர், காங்கிரஸ் தானே பணம் விழுங்க, பால் விலையை உயர்த்தியதாக, எதிர்க்கட்சியினர் அவப்பிரசாரம் செய்தனர்.
எதிர்க்கட்சியினர் அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்துகின்றனர். இதற்கு பதில் அளிக்க வேண்டியது எங்கள் கடமை.
இம்மாதம் 30ம் தேதி, ஹாசனின் அரசிகெரேவில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடக்கிறது. அப்போது எதிர்க்கட்சியினர் அவப்பிரசாரம் செய்வதை மக்களிடம் விவரிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.