/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரீல்ஸ் எடுக்க பயன்படுத்திய கத்தி எங்கே? பிக்பாஸ் பிரபலங்கள் கூறாமல் அடம் ரீல்ஸ் எடுக்க பயன்படுத்திய கத்தி எங்கே? பிக்பாஸ் பிரபலங்கள் கூறாமல் அடம்
ரீல்ஸ் எடுக்க பயன்படுத்திய கத்தி எங்கே? பிக்பாஸ் பிரபலங்கள் கூறாமல் அடம்
ரீல்ஸ் எடுக்க பயன்படுத்திய கத்தி எங்கே? பிக்பாஸ் பிரபலங்கள் கூறாமல் அடம்
ரீல்ஸ் எடுக்க பயன்படுத்திய கத்தி எங்கே? பிக்பாஸ் பிரபலங்கள் கூறாமல் அடம்
ADDED : மார் 26, 2025 07:04 AM

பெங்களூரு : 'ரீல்ஸ்' எடுக்க பயன்படுத்திய கத்தியை போலீசாரிடம் தெரிவிக்காமல் பிக்பாஸ் பிரபலங்கள் அடம்பிடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர்கள் வினய் கவுடா, ரஜத் கிஷன். இவர்கள் இருவரும் சேர்ந்து, சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோவில் இருவர் கையிலும் கத்தி இருந்தது. ரவுடி போன்ற தோரணையில் நடந்து வந்தனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், பெங்களூரு பசவேஸ்வராநகர் போலீசார் இருவர் மீதும், ஆயுத தடை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ரீல்ஸ் எடுக்க பயன்படுத்தியதாக கூறி, ஒரு பைபர் கத்தியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொழுதுபோக்கிற்கு மட்டும் வீடியோ எடுத்ததாக கூறியதால், இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டர்.
ஆனால் அவர்கள் கொடுத்த கத்தியும், வீடியோவில் இருந்த கத்தியும் வேறு மாதிரி இருந்தது.
சந்தேகம் அடைந்த போலீசார், இருவரையும் நேற்று மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர். போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
பின், இருவரையும் ரீல்ஸ் வீடியோ எடுத்த நாகரபாவிக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர்.
ரீல்ஸ் வீடியோ எடுத்ததை இருவரும் நடித்து காட்டினர். 'ரீல்ஸ் எடுக்க பயன்படுத்திய கத்தி எங்கே?' என்று கேட்டபோது, இருவரும் தங்களுக்கு தெரியாது என்று பதில் அளித்து உள்ளனர்.
அவர்கள் மீண்டும் போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். இரவிலும் விசாரணை நீடித்தது.