/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செயலி மூலம் தண்ணீர் 'புக்கிங்' குடிநீர் வாரியம் புதிய திட்டம் செயலி மூலம் தண்ணீர் 'புக்கிங்' குடிநீர் வாரியம் புதிய திட்டம்
செயலி மூலம் தண்ணீர் 'புக்கிங்' குடிநீர் வாரியம் புதிய திட்டம்
செயலி மூலம் தண்ணீர் 'புக்கிங்' குடிநீர் வாரியம் புதிய திட்டம்
செயலி மூலம் தண்ணீர் 'புக்கிங்' குடிநீர் வாரியம் புதிய திட்டம்
ADDED : மார் 24, 2025 04:56 AM
பெங்களூரு: ''யாருக்கு தண்ணீர் வேண்டுமோ, அவர்கள் மொபைல் போன் செயலியில் புக் செய்து, அதிலேயே கட்டணம் செலுத்தலாம். தனியார் டேங்கரில் தண்ணீர் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது,'' என, பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம பிரசாத் மனோகர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கோடை காலம் என்பதால், எந்த இடத்திலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் டேங்கர்கள் மனம் போனபடி, பணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த குடிநீர் வாரியம் புதிய திட்டம் வகுத்துள்ளது. செயலி அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
வெப் அடிப்படையிலான, மொபைல் செயலி துவக்கப்படும். இத்தகைய செயலி அறிமுகம் செய்திருப்பது, இதுவே முதன் முறையாகும். குடிநீர் தேவைப்படுவோர், இந்த செயலியில் புக் செய்தால் அவர்களின் வீட்டுக்கு குடிநீர் வாரியம், டேங்கர் மூலமாக தண்ணீர் வினியோகிக்கும். விரைவில் செயலி லிங்க் பெங்களூரு குடிநீர் வாரிய இணைய தளத்தில் கிடைக்கும்.
இத்திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு, டேங்கர் மூலம் வினியோகிப்பது போர்வெல் தண்ணீர் அல்ல. காவிரி நீர் வினியோகிக்கப்படும். இத்திட்டத்துக்கு 200 டேங்கர்கள் பயன்படுத்தப்படும்.
யாருக்கு தண்ணீர் வேண்டுமோ, அவர்கள் செயலி மூலம் புக் செய்து, அதிலேயே கட்டணம் செலுத்தலாம். தனியார் டேங்கருக்கு அதிக பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.
தண்ணீர் தேவைப்படுவோர், 14 மணி நேரத்துக்கு முன்னதாக, தண்ணீர் கொண்டு வர வேண்டிய முகவரியுடன் புக்கிங் செய்ய வேண்டும். இது குறித்து வாடிக்ககையாளர்களுக்கு ஓ.டிபி., வரும். இதை டேங்கர் ஊழியரிடம் காட்டி, தண்ணீர் பெறலாம். சுத்திகரிக்கப்பட்ட தரமான தண்ணீர் வினியோகிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.