/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஐ.ஏ.எஸ்., ஆக ஆசையா? வழிகாட்டும் ராம்பிரசாத் மனோகர் ஐ.ஏ.எஸ்., ஆக ஆசையா? வழிகாட்டும் ராம்பிரசாத் மனோகர்
ஐ.ஏ.எஸ்., ஆக ஆசையா? வழிகாட்டும் ராம்பிரசாத் மனோகர்
ஐ.ஏ.எஸ்., ஆக ஆசையா? வழிகாட்டும் ராம்பிரசாத் மனோகர்
ஐ.ஏ.எஸ்., ஆக ஆசையா? வழிகாட்டும் ராம்பிரசாத் மனோகர்
ADDED : செப் 09, 2025 05:10 AM

பெங்களூரு: ஐ.ஏ.எஸ்., ஆக ஆசையாக உள்ளவர்களுக்கு வழிகாட்டுவதற்காக, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர் தயாராக உள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தின் கனவுகளை நனவாக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை உள்ளதா... ஆனால் அதற்காக படிப்பதற்கு வழிகாட்டுதல் இல்லாமல் யோசிக்கிறீர்களா?
கவலை வேண்டாம்; உங்களுக்கு வழிகாட்ட கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் தயாராக உள்ளது. வரும் 11ம் தேதி, பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள தினச்சுடர் அலுவலக மாடியில் உள்ள, கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில், இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவருமான ராம்பிரசாத் மனோகர் வழிகாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலில் பதிவு செய்யும் 20 பேருக்கு மட்டுமே அனுமதி. வாய்ப்புக்கு முந்துங்கள், வாழ்க்கையை வெல்லுங்கள். karnatakatamiljournalists@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: 63631 18988.