/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாக்லேட்டில் மனித பல் கிராமத்தினர் அதிர்ச்சி சாக்லேட்டில் மனித பல் கிராமத்தினர் அதிர்ச்சி
சாக்லேட்டில் மனித பல் கிராமத்தினர் அதிர்ச்சி
சாக்லேட்டில் மனித பல் கிராமத்தினர் அதிர்ச்சி
சாக்லேட்டில் மனித பல் கிராமத்தினர் அதிர்ச்சி
ADDED : ஜூன் 15, 2025 03:58 AM
பெங்களூரு: அனைவரும் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டில் மனிதரின் பல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
கோலார் மாவட்டம், பங்கார்பேட் தாலுகாவின், பூதிகோட்டே கிராமத்தில் வசிப்பவர் பாரதம்மா. இவர் நேற்று மாலை தன் வீட்டின் அருகில் உள்ள சில்லரை கடையில், சாக்லேட் வாங்கினார்.
வீட்டுக்கு கொண்டுச் சென்று, பேப்பரை பிரித்து சாப்பிட்டபோது, கெட்டியான தட்டுப்பட்டது. அதை எடுத்து பார்த்தபோது, மனித பல் என்பது தெரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாரதம்மா, உடனடியாக கடைக்கு சென்று, பல்லை காட்டி விசாரித்தார்.
கடைகாரரும், 'இந்த சாக்லேட்டை நாங்கள் தயாரிக்கவில்லை. டிஸ்ட்ரிபியூட்டர் சப்ளை செய்த சாக்லேட்டுகளை, நாங்கள் விற்கிறோம். இதில் மனிதரின் பல் எப்படி வந்தது என்பது எங்களுக்கு தெரியாது. அது எந்த கம்பெனி சாக்லேட் என்பதும் தெரியாது' என பதில் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தால், கிராமத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.