/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 8க்குள் அறிக்கை அளிக்க விஜேந்திரா உத்தரவு வெள்ளம் பாதித்த பகுதிகளில் ம.ஜ.த., ஆய்வு 8க்குள் அறிக்கை அளிக்க விஜேந்திரா உத்தரவு வெள்ளம் பாதித்த பகுதிகளில் ம.ஜ.த., ஆய்வு
8க்குள் அறிக்கை அளிக்க விஜேந்திரா உத்தரவு வெள்ளம் பாதித்த பகுதிகளில் ம.ஜ.த., ஆய்வு
8க்குள் அறிக்கை அளிக்க விஜேந்திரா உத்தரவு வெள்ளம் பாதித்த பகுதிகளில் ம.ஜ.த., ஆய்வு
8க்குள் அறிக்கை அளிக்க விஜேந்திரா உத்தரவு வெள்ளம் பாதித்த பகுதிகளில் ம.ஜ.த., ஆய்வு
ADDED : செப் 04, 2025 11:18 PM
பெங்களூரு: கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து, வரும் 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட தலைவர்களுக்கு பா.ஜ., மாநிலத் தலைவர் விஜேந்திரா உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலத்தில், பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மக்கள், விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.
ஆனால், 'முதல்வர் சித்தராமையா உட்பட, அமைச்சர்கள் மழைச்சேத பகுதிகளை பார்வையிடவில்லை. நிவாரண பணிகளை துவக்கவில்லை' என, பா.ஜ., குற்றஞ்சாட்டுகிறது.
எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, மழைச்சேத பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விவசாயிகளுக்கு இரட்டிப்பு நிவாரணம் கிடைக்க செய்தார்.
இன்றைய காங்கிரஸ் அரசு, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவில்லை. எனவே அரசை தட்டியெழுப்பி, நிவாரண பணிகளில் ஈடுபடுத்துவதாக, பா.ஜ., அறிவித்துள்ளது.
மாநிலத்தின் மழைச்சேத பகுதிகளை ஆய்வு செய்து, சேதமடைந்த பயிர்கள், வீடுகள், உயிரிழப்பு, சாலைகள் உட்பட, அனைத்து பாதிப்புகள் குறித்தும், புகைப்படங்களுடன் வரும் 8ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி, கட்சியின் அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும், மாநில தலைவர் விஜயேந்திரா உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று, மற்றொரு எதிர்க்கட்சியான ம.ஜ.த.,வும், மழைச்சேத பகுதிகளை ஆய்வு செய்ய, இரண்டு குழுக்களை அமைத்துள்ளது.
கல்யாண கர்நாடகா பகுதி மாவட்டங்களுக்கு, கட்சியின் மாநில பொதுச்செயலர் வெங்கடராவ் நாடகவுடா தலைமையில் ஒரு குழுவும், மலைப்பகுதி மாவட்டங்களுக்கு முன்னாள் அமைச்சர் ரேவண்ணா தலைமையில் ஒரு குழுவும் ஆய்வு மேற்கொள்ள உள்ளன.
வெங்கடராவ் நாடகவுடா தலைமையிலான குழுவில், எம்.எல்.ஏ.,க்கள் சரணகவுடா கந்தகூரு, நேமிராஜ் நாயக், கரெம்மா நாயக், முன்னாள் அமைச்சர் பன்டெப்பா காஷம்பூர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தொட்டப்ப கவுடா பாட்டீல் நரபோளா, ராஜா வெங்கடப்பா நாயக், குரு லிங்கப்பகவுடா, அசோக் குத்தேதார், விரூபாக்ஷ, சுபாஷ் சந்திர கடகடி உள்ளனர்.
இக்குழுவினர் வரும் 9ம் தேதி முதல், மூன்று நாட்கள் கலபுரகி, யாத்கிர் மாவட்டங்களில் மழைச்சேத பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்வர்.
ரேவண்ணா தலைமையிலான குழுவில், எம்.எல்.ஏ.,க்கள் மஞ்சு, பாலகிருஷ்ணா, சாரதா பூர்யநாயக், ஸ்வரூப் பிரகாஷ், போரேகவுடா, முன்னாள் அமைச்சர் ஹெச்.கே.குமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாரூக், பிரசன்னகுமார், லிங்கேஷ், சுதாகர் ஷெட்டி, கடிதாள் கோபால், மாதவ கவுடா உள்ளனர்.
இக்குழுவினர் 13 மற்றும் 14ல் ஷிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில் மழைச்சேதங்களை ஆய்வு செய்வர். இரண்டு குழுவினரும் ஆய்வு முடித்து, மாநில அரசிடம் தாக்கல் செய்து, நிவாரணம் வழங்கும்படி ம.ஜ.த., வலியுறுத்தும்.