இடைத்தேர்தல் தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது விஜயேந்திரா பேட்டி
இடைத்தேர்தல் தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது விஜயேந்திரா பேட்டி
ADDED : மே 04, 2026 10:59 PM

பெங்களூரு: ''இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. அதை மீறி தோல்வி அடைந்தது ஏமாற்றமாக உள்ளது,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இடைத்தேர்தல் நடந்த தாவணகெரே தெற்கு, பாகல்கோட் தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. அதிலும், பாகல்கோட் மீண்டும் எங்கள் வசம் வரும் என்று நம்பினோம். இரு தொகுதிகளிலும் தொண்டர்கள் சக்திக்கு மீறி பணியாற்றினர். இருந்தும், வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது.
பாகல்கோட்டில் சித்தராமையா, 15 நாட்கள் பிரசாரம் செய்தார். அமைச்சர்களும் இங்கு முகாமிட்டனர். இரு தொகுதியிலும் பின்னடைவு ஏற்பட்டதை ஏற்றுக் கொள்கிறோம். இனி வரும் காலங்களில் கட்சியின் அமைப்பை வலுப்படுத்த வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரியில் கிடைத்த வெற்றி, பிரதமர் மோடியின் தலைமைக்கு இன்னும் பெரும் பலம் அளித்து உள்ளது. தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் நடந்த தேர்தலில், கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்கள் தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டி உள்ளனர்.
ஆவணம், அதிகார போதையில் தற்பெருமை பேசிய ஸ்டாலினுக்கு தக்க பாடம் கிடைத்து உள்ளது. மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜி ஆணவத்துக்கு முடிவு கட்டப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
