Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சவுஜன்யா வீட்டிற்கு சென்ற விஜயேந்திரா பா.ஜ., தலைவர்கள் கடும் அதிருப்தி

சவுஜன்யா வீட்டிற்கு சென்ற விஜயேந்திரா பா.ஜ., தலைவர்கள் கடும் அதிருப்தி

சவுஜன்யா வீட்டிற்கு சென்ற விஜயேந்திரா பா.ஜ., தலைவர்கள் கடும் அதிருப்தி

சவுஜன்யா வீட்டிற்கு சென்ற விஜயேந்திரா பா.ஜ., தலைவர்கள் கடும் அதிருப்தி

ADDED : செப் 04, 2025 03:42 AM


Google News
Latest Tamil News
மங்களூரு: தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்திவிட்டு, கல்லுாரி மாணவி சவுஜன்யா வீட்டிற்கு சென்ற விஜயேந்திரா மீது, பா.ஜ., தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி உஜ்ரேயை சேர்ந்தவர் சவுஜன்யா; கல்லுாரி மாணவி. 2012ல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

சவுஜன்யா கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரித்தது. சந்தோஷ் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால், 2023ல் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தர்மஸ்தலாவில் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக, சின்னையா என்பவர் அளித்த பொய் புகாரின் பின்னணியில், ராஷ்ட்ரீய ஹிந்து ஜாகரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி இருப்பதை எஸ்.ஐ.டி., கண்டுபிடித்தது. 'சவுஜன்யா கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' என, மகேஷ் திம்மரோடி தான் போராட்டம் நடத்துகிறார்.

பா.ஜ., உதவி கடந்த 1ம் தேதி தர்மஸ்தலாவை பாதுகாப்போம் என்ற பெயரில், தர்மஸ்தலாவில் பா.ஜ., மாநாடு நடத்தியது. கட்சியின் மாநில த லைவர் விஜயேந்திரா தலைமையில் நடந்த மாநாட்டில், எதிர்க்கட்சித் தலைவர் அசோக், முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா உள்ளிட்ட, அக்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு முடிந்ததும் தலைவர்கள், அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

ஷிவமொக்காவின் ஷிகாரிபுராவுக்கு செல்ல இருந்த விஜயேந்திரா, கடைசி நேரத்தில் தன் பயணத்தில் மாற்றம் செய்தார். சவுஜன்யா வீட்டிற்குச் சென்றார். அவருடன் தட்சிண கன்னடா எம்.பி., பிரிஜேஷ் சவுதா, பெல்தங்கடி எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா மட்டுமே சென்றனர்.

'சவுஜன்யா கொலையில் நியாயம் கிடைக்க, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்; பா.ஜ., அனைத்து உதவிகளையும் செய்யும்' என, சவுஜன்யாவின் தாய் குஸ்மாவதியிடம் , விஜயேந்திரா உறுதி அளித்தார்.

சவுஜன்யா வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் நிர்வாக குடும்பத்தினர் மீது, குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், கோவில் நிர்வாகத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திவிட்டு, சவுஜன்யா வீட்டிற்கு விஜயேந்திரா சென்றதற்கு, கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தனி ஆவர்த்தனம் செய்வதாக, விஜயேந்திராவுக்கு எதிராக மூத்த தலைவர்கள் அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளனர். இதுபற்றி விஜயேந்திரா எந்த கருத்தும் கூறவில்லை.

விசாரணைக்கு ஆஜர்

'சவுஜன்யா கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என, தர்மஸ்தலா வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ.டி.,யிடம், சவுஜன்யாவின் தாய் குஸ் மாவதி இரண்டு நாட்களுக்கு முன்பு மனு கொடுத்தார். அந்த மனுவில், உஜ்ரேயை சேர்ந்த உதய்குமார் ஜெயின் உட்பட 3 பேரின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக உதய்குமாருக்கு, எஸ்.ஐ.டி., சம்மன் அனுப்பியது. நேற்று அவர் ஆஜரானார். காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை விசாரணை நடந்தது. பின், அவர் விடுவிக்கப்பட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us