Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு பஸ் மோதி விபத்து எஸ்.ஐ., உட்பட இருவர் பலி

அரசு பஸ் மோதி விபத்து எஸ்.ஐ., உட்பட இருவர் பலி

அரசு பஸ் மோதி விபத்து எஸ்.ஐ., உட்பட இருவர் பலி

அரசு பஸ் மோதி விபத்து எஸ்.ஐ., உட்பட இருவர் பலி

ADDED : மே 19, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
ராம் நகர்: கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், சாலை டிவைடரை தாண்டி, எதிரே வந்த வாகனங்கள் மீது மோதியதில், போலீஸ் எஸ்.ஐ., உட்பட இருவர் பலியாகினர்.

ராம் நகர் மாவட்டம், கனகபுராவில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலையில், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் வந்து கொண்டிருந்தது. ககலிபுரா அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடியது.

சாலை டிவைடரை தாண்டிய பஸ், எதிரே வந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. பின், அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

பஸ்சில் இருந்த 10க்கும் மேற்பட்ட பயணியர், லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்தில், பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்த நாகராஜ், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவர் என இருவர் உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த மூவர், தயானந்த சாகர் மருத்துவமனையிலும், ஒருவர் நிமான்ஸ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த கக்கலிபுரா போலீசார் அங்கு வந்தனர்.

அவர்களின் முதற்கட்ட விசாரணையில், 'பஸ் ஓட்டுநர், அதிவேகமாகவும், அலட்சியத்துடனும் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

.

படம்: நாகராஜ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us