/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நகை, பணத்துக்காக பெண் கொலை உறவினர் உட்பட இருவர் கைது நகை, பணத்துக்காக பெண் கொலை உறவினர் உட்பட இருவர் கைது
நகை, பணத்துக்காக பெண் கொலை உறவினர் உட்பட இருவர் கைது
நகை, பணத்துக்காக பெண் கொலை உறவினர் உட்பட இருவர் கைது
நகை, பணத்துக்காக பெண் கொலை உறவினர் உட்பட இருவர் கைது
கழுத்து நெரித்து
மகளுக்கு திருமணம் செய்ய, தம்பதி தங்க நகைகளை சேர்த்து வைத்துள்ளனர். கடந்த 26ம் தேதி காலையில், கணவர் கடைக்கும், மகள் பணிக்கும், மகன் பள்ளிக்கும் சென்றிருந்தனர். லதா தனியாக இருந்தார். காலை 11:00 மணியளவில், வீட்டுக்குள் வந்த மர்மநபர்கள், லதாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பீரோவில் மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள், 2 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு மொபைல் போனை கொள்ளை அடித்து கொண்டு தப்பியோடினர்.
எலக்ட்ரீஷியன்
லதா குடும்பத்தினருக்கு உறவினரான புரந்தரா, அவ்வப்போது வீட்டுக்கு வருவார். பீதரில் கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றிய இவர், யாரையோ நம்பி, தீய பழக்கத்தால் பெருமளவில் பணத்தை இழந்தார். தன் உறவினரான துணி வியாபாரி பிரகாஷ் வீட்டில் பணம், நகைகள் இருப்பதை தெரிந்து கொண்டு, கொள்ளையடிக்க தன் நண்பர் சிவப்பாவுடன் சேர்ந்து, திட்டம் தீட்டினார்.