கோவில் விழா
l கங்கையம்மன் கோவில் 87 ம் ஆண்டு விழாவை ஒட்டி, ஸ்ரீராமபுரம் சவுடேஸ்வரி கோவிலில் இருந்து புறப்படும் கரகம், ஸ்ரீ பாஷ்யம் நகரை வந்தடைதல் - காலை 9:00 மணி; அம்பாளுக்கு சிறப்பு பூஜை, மஹா மங்களாரத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல் - முற்பகல் 11:00 மணி; கரக ஊர்வலம் புறப்பாடு - மாலை 6:30 மணி; தமிழகத்தின் பாரத மாதா நாடக மன்றத்தின் நாடகம் - இரவு 10:00 மணி. இடம்: ஸ்ரீ கங்கையம்மன் கோவில், ஸ்ரீராமபுரம்.
பூக்கரக தீமிதி விழா
l மஹா சக்தி மாரியம்மன் கோவில் 53ம் ஆண்டு பூக்கரக தீமிதி திருவிழாவை ஒட்டி, சிறப்பு ஹோமம், கோவில் முன் பொங்கலிடுதல், திருவிளக்கு பூஜை - காலையில். இடம்: ஸ்ரீ மஹா சக்தி மாரியம்மன் கோவில், திலக் நகர், ஜெயநகர்.
மா, பலாப்பழ கண்காட்சி
l கர்நாடக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் மாம்பழ, பலாப்பழ கண்காட்சி இன்றுடன் நிறைவு. - காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: லால்பாக் தாவரவியல் பூங்கா, பெங்களூரு.
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள்
l உரிமை குரல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., நலிவுற்றோர் அறக்கட்டளை நிறுவன தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., ரவி தலைமையில், எம்.ஜி.ஆர்., 108 வது பிறந்தநாள் கொண்டாட்டம். கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, எம்.ஜி.ஆர்., உரிமை குரல் புத்தகத்தை வெளியிடுகிறார் - காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை; சென்னை ராஜா குழுவினரின், எம்.ஜி.ஆர்., பட பாடல் இன்னிசை நிகழ்ச்சி - மதியம் 2:30 மணி முதல்; மலேசிய நாட்டிய தாரகை அனி பிரியா குமாரி அனிஷா ஆல்பர்ட் நாட்டியம் - மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை; பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., -- எம்.பி., மோகன், சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் ஹர்ஷத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்பு. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹலசூரு.
லேசர் ஷோ
l அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
மருத்துவமனை திறப்பு
l ஸ்ரீ பெட் மருத்துவமனை திறப்பு விழா - காலை 8:00 முதல் 11:00 மணி வரை. இடம்: விஜயநகர் நான்காவது ஸ்டேஜ், இரண்டாவது பேஸ், மைசூரு.
சைவ விழிப்புணர்வு
l பி.எஸ்.எஸ்.எம்., - விஸ்வாமித்ரா லைட் பவுண்டேஷன் சார்பில் மெகா சைவ விழிப்புணர்வு ஊர்வலம் - காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: தாசப்பா சதுக்கத்தில் இருந்து ஹர்டிங்கே சதுக்கம் வரை.
சொற்பொழிவு
l கலாசுருச்சி சார்பில் பத்திரிகையாளரும், நடிகருமான சூர்யபிரகாஷ் பண்டித்தின் 'கட்டுக்கதைகளைப் பற்றி சிந்தித்தல்' சொற்பொழிவு - காலை10:30 மணி. இடம்: சுருச்சி ரங்கமனே, சித்ராபானு சாலை, குவெம்பு நகர், மைசூரு.
பட்டுச்சேலை கண்காட்சி
l சில்க் இந்தியா - 2025 பட்டுச்சேலைகள் கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: நஞ்சராஜ பகதுார் அரங்கம், வினோபா சாலை, மைசூரு.
நடனம்
l எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
l ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
l உடுபா மியூசிகல் பெஸ்டிவல் - நேரம்: இரவு 7:00 முதல் 9:30 மணி வரை. இடம்: சவுடய்யா நினைவு அரங்கம், 16வது குறுக்கு சாலை, கோதண்டராமபுரா, மல்லேஸ்வரம்.
காமெடி
l லைவ் வித் கவுரவ் கபூர் - இரவு 9:30 முதல் 10:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.