Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

ADDED : மே 23, 2025 11:09 PM


Google News
ஆன்மிகம்

சனி பிரதோஷம்

 சனி பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் - மாலை 4:30 மணி; இறைவன், இறைவி பிரகார வலம் - மாலை 6:00 மணி, மஹா மங்களாரத்தி - மாலை 6:30 மணி. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜிநகர்.

 நாகலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் - மாலை 5:00 மணி; மலர் அலங்காரம் - மாலை 6:00 மணி; தீபாராதனை - இரவு 7:00 மணி. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர்.

 சிறப்பு அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களாரத்தி - மாலை 6:00 மணி. இடம்: ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவில், தர்மராஜா கோவில் தெரு, சிவாஜிநகர்.

 கொடி மர நந்திக்கு அபிஷேகம், மூலவர் சோமேஸ்வரருக்கு அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.

 சிறப்பு அபிஷேகம் - மாலை 5:00 மணி; ரிஷப வாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரகார உற்சவம் - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி - 6:30 மணி. இடம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் தெரு, சிவாஜிநகர்.

 சிறப்பு அபிஷேகம் - மாலை 4:30 மணி; அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல் - மாலை 6:30 மணி. இடம்: கவி கங்காதேஸ்வரர் கோவில், கவிபுரா, பசவனகுடி.

 சிறப்பு அபிஷேகம் - மாலை 4:30 மணி; பிரகார உற்சவம் - மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: நாகேஸ்வரா கோவில், பேகூர்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது
நாணயவியல் தேசிய மாநாடு

 தி மைதிக் சொசைட்டி, தென் இந்திய நாணயவியல் சொசைட்டி இணைந்து நடத்தும் இரண்டு நாட்கள் நடக்கும் 33 வது நாணயவியல் தேசிய மாநாடு துவக்கம். தலைமை விருந்தினராக பெங்களூரு பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெயகர் ஷெட்டி பங்கேற்பு. தென் இந்திய நாணயவியல் சொசைட்டி பொது செயலர் நரசிம்மமூர்த்தி கவுரவிக்கப்படுகிறார். - காலை 10:30 மணி முதல். இடம்: தி மைதிக் சொசைட்டி, நிருபதுங்கா சாலை, பெங்களூரு.

வேலை வாய்ப்பு முகாம்

 ஆனந்தபுரம் குடியிருப்புவாசிகள் சமிதி, ஆனந்தபுரம் குடியிருப்போர் வளர்ச்சி கமிட்டி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்தும் 40 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம். எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம். - காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: ஜெய்பீம் பவன், ஆனந்தபுரம், விநாயகர் தியேட்டர் எதிரில், மைசூரு ரோடு, பெங்களூரு.

பட்டுச்சேலை கண்காட்சி

 சில்க் இந்தியா - 2025 பட்டுச்சேலைகள் கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: நஞ்சராஜ பகதுார் அரங்கம், வினோபா சாலை, மைசூரு.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

 டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

இசை

 உடுபா மியூசிகல் பெஸ்டிவல் - நேரம்: இரவு 7:00 முதல் 9:30 மணி வரை. இடம்: சவுடய்யா நினைவு அரங்கம், 16வது குறுக்கு சாலை, கோதண்டராமபுரா, மல்லேஸ்வரம்.

 டிரம் சர்க்கிள் - இரவு 7:00 முதல் 8:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 138/பி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 சவுத் ஸ்டோரீஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:05 மணி வரை. இடம்: இக்னைட் சூப்பர் கிளப், 26, ஹலசூரு பிரதான சாலை, அம்பாலிபுரா, எச்.எஸ்.ஆர்., லே- அவுட்.

 ஆப்ரோ இன் ஜங்கிள் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பப்பிள் தி ஜங்கிள் லாஞ்சு, நுழைவு வாசல் 9, பிரன்சஸ் அகாடமி, அரண்மனை மைதானம், பல்லாரி சாலை.

 லெட்ஸ் பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை1:00 மணி வரை. இடம்: ஹங்கிரி ஹிப்பி, 104, நான்காவது தளம், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 பில்மி பிரையேய் - இரவு 8:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: தி பூசி கிரப்பின், 105, முதல் 'ஏ' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 பாலிவுட் நைட் - இரவு 8:00 முதல் 11:00 மணி வரை. இடம்: எஸ்கேப் பை பிரிவ்லின், 78/1, 14வது குறுக்கு சாலை, சாணக்யா லே - அவுட், நாகவாரா.

காமெடி

 லைவ் வித் கவுரவ் கபூர் - இரவு 9:30 முதல் 10:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: கபே ரீசெட் - தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 மிட்நைட் காமெடி ஷோ - இரவு 10:30 முதல் 11:45 மணி வரை. இடம்: ஸ்டார் பக்ஸ், 721, சின்மயா மிஷன் ஆஸ்பிடல், முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

 ஜோக்ஸ் பிரீமியர் லீக் - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.

 ஒன்லி டார்க் ஜோக்ஸ் - இரவு 7:00 முதல் 8:15 மணி வரை; 9:00 முதல் 10:15 மணி வரை; 11:00 முதல் அதிகாலை 12:15 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, அசோக் நகர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us