/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மருத்துவ அறிக்கைக்கு லஞ்சம் மூன்று டாக்டர்கள் 'சஸ்பெண்ட்' மருத்துவ அறிக்கைக்கு லஞ்சம் மூன்று டாக்டர்கள் 'சஸ்பெண்ட்'
மருத்துவ அறிக்கைக்கு லஞ்சம் மூன்று டாக்டர்கள் 'சஸ்பெண்ட்'
மருத்துவ அறிக்கைக்கு லஞ்சம் மூன்று டாக்டர்கள் 'சஸ்பெண்ட்'
மருத்துவ அறிக்கைக்கு லஞ்சம் மூன்று டாக்டர்கள் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 17, 2025 07:32 AM
பெங்களூரு : லஞ்சம் வாங்கிக் கொண்டு, ஆய்வகத்துக்கு சாதகமான மருத்துவ அறிக்கை அளித்த மூன்று டாக்டர்களை 'சஸ்பெண்ட்' செய்து, மருத்துவ கல்வித்துறை உத்தரவிட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வகத்துக்கு சாதகமாக அறிக்கை அளிக்க, டாக்டர்கள் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு வழக்கை, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆய்வகத்துக்கு சாதகமாக மருத்துவ பரிசோதனை அறிக்கை அளிக்க லஞ்சம் பெற்றதாக, பெங்களூரின் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ கல்லுாரி ஆய்வகத்தின் உடற்கூறு அறிவியல் பேராசிரியை டாக்டர் சைத்ரா, மாண்டியா அரசு மருத்துவமனையின் எலும்புகள் பிரிவு தலைவர் டாக்டர் மஞ்சப்பா, பீதர் அரசு மருத்துவமனையின் சமூக மருத்துவ பிரிவு உதவி பேராசிரியர் அசோக் ஷெல்கே ஆகியோர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடப்பாண்டு ஜூலை 1ம் தேதி, இம்மூன்று டாக்டர்களையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது மூவரும் நீதிமன்ற காவலில் உள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, 'இ - மெயில்' மூலமாக கர்நாடக மருத்துவ கல்வித்துறைக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் அறிக்கை அனுப்பினர்.
அதன் அடிப்படையில், மூன்று டாக்டர்களையும் 'சஸ்பெண்ட்' செய்து, மருத்துவ கல்வித்துறை பொதுச்செயலர் முகமது மொஹசின், நேற்று உத்தரவிட்டுள்ளார்.