அதிகாரிகள் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்
அதிகாரிகள் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்
அதிகாரிகள் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்
அதிகாரிகள் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்
ADDED : மார் 28, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு கிழக்கு மாநகராட்சியின் 2026 - - 2027ம் நிதியாண்டிற்கான முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 3,890 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கலானது.
பட்ஜெட்டில், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சுகாதாரத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மட்டும் 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினருக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டு உள்ளது. இதில், எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு கவனத்தை ஈர்த்து உள்ளது.
துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மின்சார பைக், பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பைக், மின்சார சக்கர நாற்காலிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கவில்லை. மேயர் இல்லாததால், அதிகாரிகளே பட்ஜெட்டை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.


