Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முதியவர் அருகில் வந்து தீர்ப்பளித்த பெண் நீதிபதி

முதியவர் அருகில் வந்து தீர்ப்பளித்த பெண் நீதிபதி

முதியவர் அருகில் வந்து தீர்ப்பளித்த பெண் நீதிபதி

முதியவர் அருகில் வந்து தீர்ப்பளித்த பெண் நீதிபதி

ADDED : செப் 16, 2025 05:05 AM


Google News
மாண்டியா: மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவை சேர்ந்தவர் மாதேகவுடா, 65. இவர் மருத்துவ காப்பீடு செய்திருந்தார். இவர் ஓராண்டுக்கு முன், விபத்தில் சிக்கியதில் கால் செயலிழந்தது. தனக்கு நிவாரணம் வழங்கும்படி, காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்நிறுவனம் வழங்கவில்லை.

தனக்கு நிவாரணம் வழங்க, காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட கோரி, மத்துாரின் ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் மாதேகவுடா மனுத் தாக்கல் செய்தார். மனு தொடர்பான விசாரணை நேற்று நடந்தது. இதில் ஆஜராக, நேற்று காலை நீதிமன்றத்துக்கு வந்தார்.

கட்டடத்தின் முதல் மாடியில் வழக்கு விசாரணை நடந்தது. ஆனால், இவரால் படிகளில் ஏற முடியவில்லை. என்ன செய்வது என, தெரியாமல் கீழே உள்ள அறையில் அமர்ந்திருந்தார். இதை வக்கீல் மூலமாக அறிந்த நீதிபதி ஹரிணி, தானே மாடியில் இருந்து கீழே இறங்கி, முதியவர் அமர்ந்துள்ள இடத்திற்கே சென்று, விசாரணை நடத்தி தகவல் பெற்றார்.

அதன்பின் முதியவருக்கு, 2.50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, அதே இடத்தில் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். நீதிபதியின் மனித நேயத்தை, மக்கள் பாராட்டி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us