Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்

தங்கவயல் செக் போஸ்ட்

ADDED : செப் 22, 2025 03:59 AM


Google News

அடிதடியில் கருப்பு கோட்டுகள்!

ப. பேட்டையில் இரண்டு கருப்பு கோட்டுக்காரங்க 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நில தகராறில் உருண்டு புரண்டு மூக்கு உடைத்து காக்கி ஸ்டேஷனில் ஒருவர் மீது ஒருவர் எதிராக புகார் கொடுத்திருக்காங்க.

அதில் கருப்பு கோட்டு சங்கத்தில் இருந்து ஒருத்தரை மட்டுமே நீக்கிட்டாங்களாம். ஆனால் கோட்டு சங்கம் ஒன் சைடு சப்போர்ட் செய்வதாக குற்றம் சுமத்தி அடுத்தவர் 'ஜாதி' பலத்தை காட்ட தொடங்கி விட்டார்.

இவருக்கு ப.பேட்டை அசெம்பிளிகாரர், 'பேக்ரவுண்ட்' இருப்பதால், இவர்களின் மோதல் அரசியல் வட்டாரத்திலும் தகதகப்பா அனல் வீசுது. ஜாதி மோதலுக்கு ஆள் திரட்டும் வேலையை செய்து வராங்க. கருப்பு கோட்டுக்காரரான இவரும் டவுன் சபை உறுப்பினராக இருப்பதால், லேண்ட் மாபியா வேலையை செய்ய விடப்போவ தில்லை என்கிறார்.

மறந்துட்டாங்களே...!

கொ டியிலும், கட்சியோட பெயரிலும் இடம் பெற்ற அ எழுத்து 'தலைவர்' பிறந்த நாள் விழாவை கொண்டாட இலை கட்சியினர் மறந்துட்டாங்களே. ஆனால், அவங்களோட தொழிற்சங்கம் தான் மறக்கல.

மாநில அளவில் அந்த கட்சியை வழிநடத்த ஒரு செயலரை அறிவிக்க, சரியான ஆள் இன்னுமா கிடைக்கல. வேறு மாநிலத்தில் கட்சியே வேணாம்னு மேலிடம் நினைக்குதா. சிங்கப்பெண்மணி சிறையில் இருந்தப்போ முழு கண்காணிப்பில் இருந்த மாநிலத்தில், இன்னும் கூட மாநில செயலரை நியமிக்காததால் இன்னும் இவங்க எத்தனை நாளுக்கு பெட்டி பாம்பா அடங்கி கிடப்பாங்க.

மூன்று முறை அசெம்பிளி, ஆறு முறை நகராட்சியை கைப்பற்றிய கோல்டு சிட்டியில், கொடியை பறக்கவிட்ட தலைவரை மறந்துட்டாங்களே. முனிசி., தேர்தலில் இக்கட்சி போட்டியில் இடம் பெறுமா. இதைப்பற்றி பேச, கவனிக்க, இவங்களோட தலைமை அக்கறை காட்டுமா என எதிர்பார்க்குறாங்க. தேர்தல் நேரத்தில் செலவுக்கு வாரி வாரி கொடுத்து பழக்கப்பட்ட இக்கட்சி இப்போது சோர்வில் இருப்பதாக பேசிக்கிறாங்க.

கைதட்டி சிரிக்கிறாங்க!

மா லுார் அசெம்பிளிக்காரருக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சிகள் கொண்டாடுறாங்களோ இல்லையோ, உட்கட்சிக்குள் உள்ள அவரின் எதிரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்காங்க.

ஏற்கனவே, ப.பேட்டை அசெம்பிளிக்காரர் தொடர்ந்து மாலுார் காரர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து, துாங்க விடாமல் கிளறி வருகிறார். இதுக்கு மத்தியில், 'அசெம்பிளி பதவி செல்லாது'ங்கிற தீர்ப்பு வந்ததால், 'குஷி' மூடில் அவரோட ஆதரவாளர்கள் ஆனந்த மயக்கத்தில் தள்ளாடுறாங்க.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு போனாலும், மீளவா முடியும்னு ப.பேட்டை கைக்காரங்களே சிரிக்கிறாங்க. அசெம்பிளி பதவி மட்டுமல்ல; பால் சங்க ஊழலிலும் தண்ணீ காட்டப் போறாங்களாம். மாலுார் காரருக்கு சரிவு தானாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us