ரீலா.. ரியலா...?
ப ல ஆண்டுகளாக முனிசி., நிலத்தை தனி நபர்கள் ஆக்ரமிப்பு செய்துள்ளதை மீட்கும் பணிகள் துவங்கி இருக்குது. கோர்ட் பக்கத்தில், தாலுகா ஆபீசின் வலது புறத்தில் இருக்கும் முனிசி.,க்கு சொந்தமான நிலத்தில் தனிநபர் கட்டடத்தைக் கட்டி சொந்தம் கொண்டாடி வந்ததை முனிசி.,யின் புதிய பெரிய ஆபீசரு, ஜேசிபி இயந்திரத்தால் இடித்து தள்ள வெச்சிட்டாரு.
மார்க்கெட் யாருக்கு சொந்தம்?
ரா .பேட்டை புல்லு மார்க்கெட்டை, 100 கோடி செலவுல மாநில கேபிடல் சிட்டி கே.ஆர். மார்க்கெட் போல கட்ட உலக வங்கியிடம் கடன் வாங்க போவதாக முனிசி.,யில் பேசினாங்க. பேசின வார்த்தைகள் காற்றோடு கரைந்து போய் விட்டதா. இதை எல்லா உறுப்பினர்களுமே, 'ஓகே' சொன்னாங்களே... ஞாபகம் இருக்கா?
பதவிக்காலம் முடிய போகுது!
ந கராட்சி கவுன்சிலின் ஐந்தாண்டின் பதவிக் காலம், இன்னும் ஒரு மாதத்தில் முடியப் போகுது. மாறி மாறி பதவிக்கு வந்த 10 கமிஷனர்கள், 2 தலைவர்கள், இடையில் ஒன்றரை ஆண்டுகள் மாவட்ட கலெக்டர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 கவுன்சிலர்கள், அதிகாரத்தில் ஐந்து ஆண்டுகளாக இருந்தாங்க.
வாகன நிறுத்துமிடம் எங்கே ?
த ங்க நகரில் இருசக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். ஆனால், நகரில் வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லையே. போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. நடைபாதைகள் எல்லாம் வாகனங்கள் மயமாக காணலாம். ஜனங்க நடமாட முடியல. 60 ஆண்டுகளை கடந்த கோல்டு சிட்டியின் முனிசி., யினருக்கு, ரா.பேட்டையில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க இடமா கிடைக்கல.