Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'மாஜி' முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பெயரில் பெங்களூரில் டென்னிஸ் போட்டிக்கு ஏற்பாடு

'மாஜி' முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பெயரில் பெங்களூரில் டென்னிஸ் போட்டிக்கு ஏற்பாடு

'மாஜி' முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பெயரில் பெங்களூரில் டென்னிஸ் போட்டிக்கு ஏற்பாடு

'மாஜி' முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பெயரில் பெங்களூரில் டென்னிஸ் போட்டிக்கு ஏற்பாடு

ADDED : மார் 27, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
மறைந்த முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நினைவு கூரும் வகையில், கே.எஸ்.எல்.டி.ஏ., டென்னிஸ் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டிகள் இம்மாதம் 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கவுள்ளன.

கே.எஸ்.எல்.டி.ஏ., எனும் கர்நாடக மாநில லான் டென்னிஸ் அசோசியேஷன் அறிக்கை:

முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பல ஆண்டு காலம், கே.எஸ்.எல்.டி.ஏ., தலைவராக பொறுப்பேற்று, அசோசியேஷனை வழி நடத்தியவர். அவரை நினைவு கூரும் வகையில் கே.எஸ்.எல்.டி.ஏ., சார்பில் டென்னிஸ் போட்டிகள் நடக்கின்றன.

அனுமதி இலவசம்


கே.எஸ்.எல்.டி.ஏ., மைதானத்தில் இம்மாதம் 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை போட்டிகள் நடக்கும்.

வெற்றி பெறும் அணிக்கு, 25 லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும். பொது மக்களுக்கு அனுமதி இலவசம்.

எஸ்.எம்.கிருஷ்ணா, டென்னிஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர். 1999 முதல் 2020 வரை, கே.எஸ்.எல்.டி.ஏ., தலைவராகவும், 2015 முதல் 2023 வரை அனைத்து இந்திய டென்னிஸ் அசோசியேஷன் தலைவராகவும் இருந்தவர்.

பெங்களூரின் இதய பகுதியில், அதிநவீன கே.எஸ்.எல்.டி.ஏ., விளையாட்டு மைதானம் அமைந்ததில், அவர் பங்கு முக்கியம்.

'டபிள்யு.டி.ஏ., இந்தியன் ஓபன்' போன்ற உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை பெங்களூருக்கு கொண்டு வந்தார்.

டென்னிஸ் குறித்து அவரது தொலை நோக்கு பார்வையால், தற்போது 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஐ.டி.எப்., போட்டிகள் நடக்கின்றன.

கர்நாடகாவில் ஐ.டி.எப்., ஏ.டி.பி., சாலெஞ்சர் ஈவென்டுகள் உட்பட சர்வதேச போட்டிகளை ஏற்பாடு செய்ய அடிப்படை வசதிகள் கிடைக்க சாத்தியமானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்


துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் கிருஷ்ணா, டென்னிஸ் பிரியராக இருந்தார். கர்நாடகாவில் டென்னிசை வளர்க்கவும், 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விளையாட்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யவும் அவர் விரும்பினார்.

முதல்வராக இருந்த போது, ஓய்வற்ற பணிக்கு இடையிலும் டென்னிஸ் விளையாட நேரம் ஒதுக்கினார்.

விளையாட்டின் மீது அவருக்கு அதிகமான பற்றுதல் இருந்தது. விளையாட்டில் ஈடுபட்டு, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில், அவர் ஆர்வம் காட்டினார்.

கிருஷ்ணா துவக்கி வைத்த பாரம்பரியத்தை, கே.எஸ்.எல்.டி.ஏ., தொடர்ந்து கொண்டு செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

கிருஷ்ணாவை நினைவு கூரும் வகையில், கே.எஸ்.எல்.டி.ஏ., சார்பில் ஏற்பாடு செய்யப்படும் டென்னிஸ் போட்டிகளை, நல்ல முறையில் நடத்த தேவையான அனைத்து உதவிகளையும், கர்நாடக அரசு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கே.எஸ்.எல்.டி.ஏ., துணைத் தலைவரும், ஐ.டி., - பி.டி., துறை அமைச்சருமான பிரியங்க் கார்கே கூறியதாவது:

முன்னாள் முதல்வர் கிருஷ்ணா, விளையாட்டு துறை வளர்ச்சியில், தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர்.

அவரது வழி காட்டுதலில், தற்போது கே.எஸ்.எல்.டி.ஏ., நாட்டில் சில பெரிய ஐ.டி.எப்., - ஏ.டிபி., போட்டிகளை ஏற்பாடு செய்வதில் பெயர் பெற்றுள்ளது.

அவரை நினைவு கூரும் நோக்கில், டென்னிஸ் போட்டிகள் ஏற்பாடு செய்கிறோம். இது ஐ.டி.எப்., ஆண்களுக்கான போட்டியாகும்.

ஆண்டு தோறும் கிருஷ்ணா நினைவாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இதற்கு ஆதரவளித்த, கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us