கழுத்தை அறுத்து தமிழக நபர் தற்கொலை
கழுத்தை அறுத்து தமிழக நபர் தற்கொலை
கழுத்தை அறுத்து தமிழக நபர் தற்கொலை
ADDED : ஜூன் 21, 2025 11:17 PM
மைசூரு:கழுத்தை அறுத்துக் கொண்டு, தமிழகத்தை சேர்ந்த நபர் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகம், நீலகிரி மாவட்டம், கூடலுார் தாலுகாவின், பன்டனதொரம் கிராமத்தை சேர்ந்தவர் முகுந்தன், 38. இவர் ஏழு ஆண்டுகளாக, மைசூரு மாவட்டம், ஹெச்.டி.கோட்டே தாலுகாவின், போகேஸ்வர காலனியில் வசித்தார். நிலத்தை குத்தகைக்கு பெற்று, விவசாயம் செய்து வந்தார்.
தனியாக வசித்த இவர், சமீப நாட்களாக மன அழுத்தத்துக்கு ஆளானார். தாய்க்கு போன் செய்து, 'என்னால் இங்கு இருக்க முடியவில்லை. ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள்' என, பிடிவாதம் பிடித்தார். குடும்பத்தினரும் ஊருக்கு அழைத்துச் செல்வதாக கூறியிருந்தனர். ஆனால் வரவில்லை.
நேற்று மதியம், வயலில் இருந்த முகுந்தன், கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டார். மயங்கி கிடந்த இவரை, கவனித்த அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஹெச்.டி., கோட்டே போலீசார் விசாரிக்கின்றனர்.