/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' சரியல்ல எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' சரியல்ல
எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' சரியல்ல
எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' சரியல்ல
எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' சரியல்ல
ADDED : மார் 24, 2025 05:04 AM

ஹூப்பள்ளி,: பா.ஜ.,வின் 18 எம்.எல்.ஏ.,க்களை ஆறு மாதம் வரை சஸ்பெண்ட் செய்திருப்பதற்கு, பா.ஜ., - எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இதற்கு முன் சித்தராமையா, எதிர்க்கட்சியில் இருந்த போது, சட்டசபையின் கதவை காலால் எட்டி உதைத்தார். அன்று அவரை சஸ்பெண்ட் செய்யவில்லை. இப்போது சபாநாயகர் முன், காகிதத்தை கிழித்து எறிந்து, ஹனிடிராப் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தியதை காரணம் காட்டி, பா.ஜ., -- எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
சபாநாயகர்
காகிதங்களை கிழித்தெறிந்து போராட்டம் நடத்துவது, சமீப நாட்களில் சகஜமான விஷயம். அதற்காக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்த சபாநாயகரின் முடிவு சரியல்ல.
காங்கிரசின் அமைச்சர் ராஜண்ணாவே, ஹனிடிராப் செய்ய முயற்சி நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். ஹனிடிராப்புக்கு ஆளானவர்களின் 48 சி.டி.,க்கள் உள்ளனவாம். இதன் பின்னணியில் எந்த இயக்குனர் இருக்கிறார். இதில் மறைந்துள்ள உண்மை வெளிச்சத்துக்கு வர வேண்டுமானால், சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைத்தே ஆக வேண்டும்.
ஹனிடிராப் விவகாரத்தை, சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்காமல், அரசு பிடிவாதமாக இருந்ததே, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் போராட்டத்துக்கு காரணம். இவர்களை சபாநாயகர் தன் அலுவலகத்துக்கு வரவழைத்து, புத்திமதி கூறியிருக்கலாம். அதை விட்டு விட்டு திடீரென 18 எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்திருப்பது சரியல்ல. இதன் பின்னணியில் யாருடைய கைவரிசையோ இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
எதிரானது
ஒருவேளை பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகரின் பீடத்துக்குள் நுழைந்திருந்தாலோ அல்லது அவரை தாக்க முயற்சித்திருந்தாலோ, சஸ்பெண்ட் போன்ற கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம். நாங்களும் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டோம். ஆனால் சபாநாயகரின் இருக்கை முன் காகிதத்தை கிழித்தெறிந்தனர் என்பதால், நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.
சபாநாயகர் தாமாக முன் வந்து, சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் எந்த மீட்டிங்கிலும் பங்கேற்க கூடாது என கூறுவது, அவர்களின் உரிமைகளை பறிப்பதாகும். சபாநாயகரின் சஸ்பெண்ட் உத்தரவின் பின்னணியில் முதல்வர் சித்தராமையா இருக்கிறார். இவரே சபாநாயகரிடம் கூறி, சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.