/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ படித்த மருத்துவ கல்லுாரிக்கு மிரட்டல் விடுத்த மாணவி படித்த மருத்துவ கல்லுாரிக்கு மிரட்டல் விடுத்த மாணவி
படித்த மருத்துவ கல்லுாரிக்கு மிரட்டல் விடுத்த மாணவி
படித்த மருத்துவ கல்லுாரிக்கு மிரட்டல் விடுத்த மாணவி
படித்த மருத்துவ கல்லுாரிக்கு மிரட்டல் விடுத்த மாணவி
ADDED : ஜூன் 07, 2025 11:00 PM
மங்களூரு: தான் படித்த மருத்துவ கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவியை போலீசார் கைது செய்தனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு அருகில் உல்லால் கனச்சூர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியின் பிரசவ வார்டின் லேண்ட் லைன் போனுக்கு, ஜூன் 4ம் தேதியன்று, காலை 8:15 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது.
எதிர்முனையில் பேசிய பெண், 'காலை 11:00 மணிக்கு மருத்துவமனையில், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்' என, கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார்.
இதுகுறித்து, மருத்துவமனை அதிகாரிகள், உல்லால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் அங்கு வந்து, மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை முழுவதிலும், சோதனை நடத்தினர். வெடிபொருட்கள் தென்படவில்லை.
அதன்பின் மிரட்டல் விடுத்த பெண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, அதே கல்லுாரியில் படிக்கும் மாணவி சலசானி மோனிகா சவுத்ரி, 21, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை கண்டுபிடித்தனர். நேற்று முன் தினம் அவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்தபோது, ஜூன் 4ம் தேதி கல்லுாரியில் 'செமினார்' நடக்கவிருந்தது. இதில் மாணவி மருத்துவ பாடம் தொடர்பான, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. அதில் இருந்து தப்பிக்கும் நோக்கில், அன்றைய தினம் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
அதன்பின் அவரே உல்லால் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு, தங்கள் கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக புகார் அளித்ததையும் ஒப்புக்கொண்டார்.