/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வழிமுறை பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வழிமுறை
பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வழிமுறை
பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வழிமுறை
பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வழிமுறை
ADDED : ஜூன் 05, 2025 11:34 PM
பெங்களூரு: பள்ளிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசு உற்பத்தியாவதை தடுக்க, பள்ளி நிர்வாகத்திற்கு பல வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வழங்கி உள்ளது.
சுகாதாரம், குடும்பநலத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
பள்ளி வளாகத்தினுள் திறந்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள், கேன்கள், பக்கெட்டுகள் ஆகியவைற்றை மூட வேண்டும். திடக்கழிவுகள், பயன்படுத்தப்படாத டயர்கள் போன்றவற்றை குப்பையில் போடவும். நீண்ட நாளாக பாத்திரங்களில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரை வெளியே ஊற்றவும்.
அலங்காரத்திற்காக தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில், லார்விரோஸ் என்ற மீன்களை விட வேண்டும். பள்ளி வளாகத்தில், ஏடிஸ் கொசு இல்லை என விளம்பர பலகையை வைக்கவும்.
மாணவர்கள் முழுக்கை உடையை அணிந்து வர அறிவுறுத்துங்கள்; கொசு ஒழிப்பை ஊக்குவிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவது. பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள பகுதிகளை, துாய்மையாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.