/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குடிபோதையில் தகராறு மென் பொறியாளர் கொலை குடிபோதையில் தகராறு மென் பொறியாளர் கொலை
குடிபோதையில் தகராறு மென் பொறியாளர் கொலை
குடிபோதையில் தகராறு மென் பொறியாளர் கொலை
குடிபோதையில் தகராறு மென் பொறியாளர் கொலை
ADDED : மே 10, 2025 11:41 PM
மடிவாளா: பார்ட்டி நடக்கும்போது, இரண்டு நண்பர்கள் இடையே ஏற்பட்ட மோதல், ஒருவரின் கொலையில் முடிந்தது.
பெங்களூரு வெங்கடேஸ்வரா லே - அவுட்டின், 18வது 'ஏ' கிராசில், கட்டடம் ஒன்றின் இரண்டாவது மாடியில் வசித்தவர் மார்ட்டின் சைமன், 28. ஐந்து ஆண்டுகளாக தன் குடும்பத்துடன் இங்கு வசிக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்றில், மென் பொறியாளராக பணியாற்றினார்.
இதே கட்டடத்தில் ஒன்றரை ஆண்டாக இன்சென்ட் ராஜு, 26, என்பவர் வசிக்கிறார். இருவரும் நண்பர்கள். வார இறுதி நாட்களில் இருவரும் பார்ட்டி நடத்துவது வழக்கம். வழக்கம்போல் நேற்று முன் தினம் இரவு 10:00 மணியளவில் வீட்டின் மொட்டை மாடியில், இருவரும் மது அருந்தி பார்ட்டி நடத்தினர்; அதிகாலை வரை பார்ட்டி நீடித்தது.
குடிபோதையில் ஏதோ காரணத்தால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பரஸ்பரம் அடித்துக் கொண்டனர். வாக்குவாதம் முற்றியதில், இன்சென்ட் ராஜு, சிமென்ட் கல்லால் மார்ட்டின் சைமனை தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். சத்தம் கேட்டு குடும்பத்தினரும், அக்கம், பக்கத்தினரும் வெளியே பார்த்தபோது, இன்சென்ட் ராஜு ஓடுவது தெரிந்தது.
மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது, மார்ட்டின் சைமன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மடிவாளா போலீசார், உடலை மீட்டனர். கொலையாளியை தேடுகின்றனர்.