Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.35,000 லஞ்சம் எஸ்.ஐ., அதிரடி கைது

ரூ.35,000 லஞ்சம் எஸ்.ஐ., அதிரடி கைது

ரூ.35,000 லஞ்சம் எஸ்.ஐ., அதிரடி கைது

ரூ.35,000 லஞ்சம் எஸ்.ஐ., அதிரடி கைது

ADDED : மே 17, 2025 11:13 PM


Google News
காடுகோடி: விபசார வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க 35,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, எஸ்.ஐ., கைது செய்யப்பட்டுள்ளார். ஏட்டு தப்பி ஓடினார்.

பெங்களூரு, காடுகோடியில் உள்ள லாட்ஜில், விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, கடந்த 12ம் தேதி காடுகோடி போலீசார் சோதனை நடத்தினர்.

ஒரு அறையில் விபசாரம் நடப்பது தெரிந்தது. ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வந்த, சீகேஹள்ளியின் ஜெயராம் என்பவர் பிடிபட்டார். அவரது பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த பின், விசாரணை நடத்திவிட்டு அனுப்பி வைத்தனர். பின், ஜெயராமை தொடர்பு கொண்டு எஸ்.ஐ., பிரவீன் சித்ரகர், ஏட்டு யல்லப்பா ஆகியோர் பேசினர்.

'உங்கள் மீது விபசார வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமானால் 1.20 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என்று கேட்டனர்.

இதற்கு ஒப்புக் கொண்ட அவர், முதற்கட்டமாக 75,000 ரூபாய் கொடுத்துவிட்டார். ஆனாலும் மீதம் 45,000 ரூபாய் தரும்படி எஸ்.ஐ.,யும், ஏட்டும் தொல்லை கொடுத்து வந்தனர்.

இதனால் இருவர் மீதும் லோக் ஆயுக்தாவில் ஜெயராம் புகார் செய்தார். அவருக்கு சில அறிவுரைகள் வழங்கிய லோக் ஆயுக்தா போலீசார், ரசாயன பவுடர்தடவிய 35,000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் போலீஸ் நிலையம் சென்ற ஜெயராம், பிரவீன், யல்லப்பாவிடம் அப்பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு லோக் ஆயுக்தா போலீசார் வந்தனர்.

இதை கவனித்த யல்லப்பா அங்கிருந்து தப்பி ஓடினார்; பிரவீன் கைது செய்யப்பட்டார். லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us