Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கணவர் மாயமான அதிர்ச்சி மனநிலை பாதித்த மனைவி

கணவர் மாயமான அதிர்ச்சி மனநிலை பாதித்த மனைவி

கணவர் மாயமான அதிர்ச்சி மனநிலை பாதித்த மனைவி

கணவர் மாயமான அதிர்ச்சி மனநிலை பாதித்த மனைவி

ADDED : மே 23, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
பாகல்கோட்: பாகல்கோட் மாவட்டம், இளகல் தாலுகாவின் வடகேரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரவ்வா, 26. இவரது குடும்பத்தினர் பெங்களூரில் கட்டட தொழிலாளிகளாக பணியாற்றினர். இவருக்கும், கூடுர் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிட்டப்பா என்பவருக்கும்,2018 பிப்ரவரி 14ம் தேதி, காதலர் தினத்தன்றுதிருமணம் நடந்தது.

சங்கரவ்வாவும், அவரதுகணவரும் பெங்களூரின் கசபனஹள்ளியிலும்,அவரது பெற்றோர் ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டிலும் வசித்தனர்.

திருமணமான இரண்டு மாதங்களுக்கு பின், ஒருநாள் காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவர் பிட்டப்பா, மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பயன் இல்லை.

கணவர் திடீரென காணாமல் போனதால், அதிர்ச்சியடைந்த சங்கரவ்வாவின் மனநிலை பாதிக்கப்பட்டது. அதன்பின் இவரது குடும்பத்தினர், பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தனர்.

சங்கரவ்வாவின் மனநிலை மேலும் மோசமானது. தாயை கண்மூடித்தனமாக அடிப்பது, ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.

சங்கரவ்வாவின் பெற்றோர் கூலி செய்பவர்கள். மகளை தனியாக விட்டு சென்றால், எங்காவது சென்று விடுவார்; எதையாவது செய்து கொள்வார் என்ற அச்சத்தில், இவரது இரண்டு கை, கால்களையும் கட்டி, அறையில் அடைத்து விட்டு வேலைக்கு செல்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us