/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/காங்., தலைவர் பதவியை விட்டு தர சிவகுமார் மறுப்பு!: மேலிட பொறுப்பாளர் 7ல் மீண்டும் வருகைகாங்., தலைவர் பதவியை விட்டு தர சிவகுமார் மறுப்பு!: மேலிட பொறுப்பாளர் 7ல் மீண்டும் வருகை
காங்., தலைவர் பதவியை விட்டு தர சிவகுமார் மறுப்பு!: மேலிட பொறுப்பாளர் 7ல் மீண்டும் வருகை
காங்., தலைவர் பதவியை விட்டு தர சிவகுமார் மறுப்பு!: மேலிட பொறுப்பாளர் 7ல் மீண்டும் வருகை
காங்., தலைவர் பதவியை விட்டு தர சிவகுமார் மறுப்பு!: மேலிட பொறுப்பாளர் 7ல் மீண்டும் வருகை

சதீஷ் 'துண்டு'
இதற்கிடையில், பெங்களூரில் முகாமிட்டு, மூன்று நாட்களாக 40க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆலோசனை நடத்தி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தலைவரை, முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.
அதிக வாய்ப்பு
இப்போது முதல்வராக பொறுப்பு ஏற்றால், மாநில தலைவர் பதவியை கண்டிப்பாக விட்டு தர வேண்டும். அப்படி நடந்தால், தலைவர் பதவி சதீஷ் ஜார்கிஹோளி வசம் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. சதீஷ் தலைவராக இருந்து 2028 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், சிவகுமாருக்கு கண்டிப்பாக முதல்வர் பதவி கிடைக்காது.
கட்சி பெயர்
இதையடுத்து, டில்லி புறப்பட்டு சென்றுள்ள ரன்தீப் சிங் மீண்டும் வரும் 7ம் தேதி பெங்களூரு வர உள்ளார். இம்முறை மூத்த அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
கார்கேவால் பயம்
சிவகுமாரிடம் பல வழக்குகளில் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்துகின்றன. ஒருவேளை சிவகுமாரை முதல்வராக்கி அவர் பதவியில் இருக்கும் போது, டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போன்று கைது செய்யப்பட்டால், தங்கள் கட்சி பெயர் கெட்டுவிடும் என்றும் காங்கிரஸ் பயப்படுகிறது.