/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நானும், சிவகுமாரும் ஒற்றுமையாக உள்ளோம்: சித்தராமையா விளக்கம் நானும், சிவகுமாரும் ஒற்றுமையாக உள்ளோம்: சித்தராமையா விளக்கம்
நானும், சிவகுமாரும் ஒற்றுமையாக உள்ளோம்: சித்தராமையா விளக்கம்
நானும், சிவகுமாரும் ஒற்றுமையாக உள்ளோம்: சித்தராமையா விளக்கம்
நானும், சிவகுமாரும் ஒற்றுமையாக உள்ளோம்: சித்தராமையா விளக்கம்
ADDED : ஜூலை 01, 2025 03:45 AM
மைசூரு: ''நானும், துணை முதல்வர் சிவகுமாரும் ஒன்றாக சேர்ந்து இருக்கிறோம், யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்தமாட்டோம். இந்த அரசு, ஐந்து ஆண்டுகள், பாறை போன்று உறுதியாக இருக்கும்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரு விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:
நானும், சிவகுமாரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். எங்களுக்குள் விரிசல் இருப்பதாக, பா.ஜ.,வினர் பொய் சொல்கின்றனர்.
இந்த அரசு ஐந்து ஆண்டுகள், பாறை போன்று இருக்கும். யார் என்ன கூறினாலும் பொருட்படுத்தமாட்டோம். பா.ஜ.,வினர் பொய் சொல்வதில் நிபுணர்கள். அவர்களின் பேச்சை பற்றி, நாங்கள் கவலைப்படவில்லை.
மேகதாது திட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். மழைக்காலத்தில் பெருமளவில் தண்ணீர் வீணாகிறது. இதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
தண்ணீரை பயன்படுத்த, இத்திட்டத்தை செயல்படுத்துவது அவசியம். இதை மனதில் கொண்டு, மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
மஹாராஷ்டிரா போன்று, நாங்களும் மும்மொழி நடைமுறையை ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறோம். ஹாசனில் பலர் மாரடைப்பால் இறந்தனர்.
சிறிய வயதில் மாரடைப்பு ஏன் வருகிறது என்பதை தெரிந்து கொண்டு, அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும். காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடுகிறோம். இதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அந்த அளவு நீரை திறந்துவிடுவோம்.
ஜூன் மாதம், ஏற்கனவே 22 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிட்டோம். தீர்ப்பாயத்தின் உத்தரவை, நாங்கள் பின்பற்றுகிறோம். ஆனால் கூடுதல் நீரை பயன்படுத்த, மேகதாது திட்டம் மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவகுமார், துணை முதல்வர்