/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கொரோனா சிகிச்சை அளிக்க தங்கவயலில் தனி அறை கொரோனா சிகிச்சை அளிக்க தங்கவயலில் தனி அறை
கொரோனா சிகிச்சை அளிக்க தங்கவயலில் தனி அறை
கொரோனா சிகிச்சை அளிக்க தங்கவயலில் தனி அறை
கொரோனா சிகிச்சை அளிக்க தங்கவயலில் தனி அறை
ADDED : ஜூன் 13, 2025 11:12 PM

தங்கவயல்: ராபர்ட் சன் பேட்டை அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனி அறையை எம்.எல்.ஏ., ரூபகலா நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மருத்துவ தலைமை அதிகாரி டாக்டர் சுரேஷ் குமார் மற்றும் மருத்துவர்கள் இருந்தனர்.
ஆய்வுக்குப் பின் எம்.எல்.ஏ., ரூபகலா அளித்த பேட்டி:
தங்கவயல் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தப்படும். 'இண்டகிரேட்டட் இண்டஸ்ட்ரியல் டவுன் ஷிப்' எனும் ஒருங்கிணைந்த தொழில் நகரம் உருவாக உள்ளது. அதற்கேற்ப உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.
இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும். சிலரை வேண்டும் என்றே தீவிர சிகிச்சைக்காக வெளியிடத்துக்கு செல்லுமாறு பரிந்துரைக்கக் கூடாது.
எல்லா விதமான நோய்களுக்கும் இங்கேயே மருத்துவம் கிடைக்க வேண்டும். தங்கவயல் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவும், சுகாதார அமைச்சரிடமும் தெரிவித்திருக்கிறேன். அமைச்சரவை கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மகப்பேறு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்படும். தேவையில்லாமல் தாய் - சேய்களை வெளியிடத்துக்கு அனுப்ப வேண்டாம். உள்நோக்கத்துடன் வெளியேற வைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவையான டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர சேவைக்கு ஆம்புலன்ஸ் சேவையும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உள் நோயாளிகள் அறைகள், மருந்து வழங்கும் அறைகளை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். மருந்து இருப்பு குறித்த விபரங்களையும் கேட்டறிந்தார்.