/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு 'மால்'களில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம் பெங்களூரு 'மால்'களில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
பெங்களூரு 'மால்'களில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
பெங்களூரு 'மால்'களில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
பெங்களூரு 'மால்'களில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
ADDED : மே 14, 2025 12:25 AM
பெங்களூரு : காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பின், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்களில் அனைவரையும் சோதனையிட்ட பின், உள்ளே அனுமதிக்கின்றனர்.
காஷ்மீரின், பஹல்காமில் சுற்றுலா பயணியர் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி, மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. எந்த வகையில் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என, போலீஸ்துறை ஆலோசனை கூறியுள்ளது. பெங்களூரில் ஷாப்பிங் மால்களில் மிக அதிகமான மக்கள் கூடுகின்றனர். எனவே இங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பெங்களூரில் 41 மால்கள் உள்ளன. இங்கு வரும் ஒவ்வொருவரையும் பாதுகாப்பு ஊழியர் நன்கு பரிசோதித்த பின்னரே, உள்ளே அனுமதிக்கிறார். கத்தி உட்பட, மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும், எந்த விதமான பொருட்களையும் அனுமதிப்பது இல்லை.
மால்களின் உள்ளேயும், வெளியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கு இடமான ஆட்கள் நடமாடினால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தருகின்றனர். பொது மக்களும் சோதனைக்கு ஒத்துழைப்பு தருகின்றனர். 'அசம்பாவிதங்களை தவிர்க்க, இத்தகைய நடவடிக்கை நல்லது' என, கருத்து தெரிவித்துள்ளனர்.