/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வருமான வரி அதிகாரிகளாக நடித்து பெங்களூரில் ரூ.1.50 கோடி கொள்ளை வருமான வரி அதிகாரிகளாக நடித்து பெங்களூரில் ரூ.1.50 கோடி கொள்ளை
வருமான வரி அதிகாரிகளாக நடித்து பெங்களூரில் ரூ.1.50 கோடி கொள்ளை
வருமான வரி அதிகாரிகளாக நடித்து பெங்களூரில் ரூ.1.50 கோடி கொள்ளை
வருமான வரி அதிகாரிகளாக நடித்து பெங்களூரில் ரூ.1.50 கோடி கொள்ளை
ADDED : செப் 23, 2025 05:03 AM
எலஹங்கா: வருமான வரித்துறை அதிகாரிகள் போன்று, பேராசிரியரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம கு ம்பல், 1.50 கோடி ரூபாய் ரொக்கம், 50 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
பெங்களூரின் எலஹங்காவில் குடும்பத்துடன் வசிப்பவர் கிரிராஜ். இவர் கல்லுாரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றுகிறார். நிலம் வாங்குவதற்காக, 1.50 கோடி ரூபாய் சேமித்திருந்தார். இந்த பணத்தை பையில் போட்டு, பாதுகாப்பாக சமையல் அறையில் வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் கிரிராஜ் வெளியே சென்றிருந்தார். அப்போது இன்னோவா காரில் நான்கு பேர், இவரது வீட்டுக்கு வந்தனர். தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என, அவர்கள் அறிமுகம் செய்து கொண்டனர்.
நான்கு பேரும் வெள்ளை நிற சட்டை அணிந்து, 'டை' கட்டி 'டிப் டாப்' ஆக இருந்ததால், அதிகாரிகள் என, கிரிராஜின் குடும்பத்தினர் நம்பினர்.
அந்நபர்கள், கிரிராஜின் குடும்பத்தினரின் மொபைல் போன்களை பறித்துக் கொண்டனர். 'பணத்தை எங்கு வைத்துள்ளீர்கள்?' என, வீடு முழுவதும் தேடி, 50 கிராம் தங்க நகைகளை எடுத்துக் கொண்டனர். சமையல் அறையில் இருந்த 1.50 கோடி ரூபாயையும் எடுத்துக் கொண்டு, காரில் சென்றுவிட்டனர்.
சிறிது நேரத்துக்கு பின், கிரிராஜ் வீட்டுக்கு வந்தபோது, குடும்பத்தினர் நடந்த சம்பவத்தை விவரித்தனர். சந்தேகமடைந்த அவர், உடனடியாக எலஹங்கா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வீட்டுக்கு வந்து பார்வையிட்டனர். அதிகாரிகள் என்று கூறி வந்தவர்களின் கார் பதிவு எண்ணை ஆய்வு செய்தபோது, அது போலி என்பது தெரியவந்தது.
கிரிராஜின் வீட்டில் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு, கொள்ளையடித்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
அதிகாரிகளை போன்று நடித்து, கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பணம் விஷயத்தை ரகசியமாக வைத்திருப்பது அவசியம். அறிமுகம் இல்லாத நபர்கள், அதிகாரிகளை போன்று வந்தால், அவர்களை நம்பாதீர்கள். வீட்டுக்குள் அ னுமதிக்காதீர்கள்.
சந்தேகத்துக்கு இடமாக, யாராவது போன் செய்து மிரட்டினாலோ அல்லது வீட்டுக்கு வந்தாலோ பயப்படாமல், போலீசாருக்கு தகவல் தாருங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.