/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஹுலிகெம்மா கோவிலில் ரூ.1.45 கோடி காணிக்கை ஹுலிகெம்மா கோவிலில் ரூ.1.45 கோடி காணிக்கை
ஹுலிகெம்மா கோவிலில் ரூ.1.45 கோடி காணிக்கை
ஹுலிகெம்மா கோவிலில் ரூ.1.45 கோடி காணிக்கை
ஹுலிகெம்மா கோவிலில் ரூ.1.45 கோடி காணிக்கை
ADDED : செப் 04, 2025 11:13 PM

கொப்பால்,: வரலாற்று பிரசித்தி பெற்ற ஹுலிகெம்மா கோவில் உண்டியலில், 48 நாட்களில் 1.45 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.
கொப்பால் நகரின், ஹுலகி கிராமத்தில் ஹுலிகெம்மா கோவில் அமைந்துள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்ற கோவிலாகும். வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.
இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். 48 நாட்களுக்கு முன்பு, உண்டியல் திறக்கப்பட்டது. நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன், உண்டியல் எண்ணும் பணிகள் நடந்தன. அதில் 1.45 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியிருந்தது. இதை தவிர 80 கிராம் தங்க நகைகள், 80 கிலோ வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
ஆகஸ்டில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகள் இருந்தன. அரசு விடுமுறைகளும் இருந்ததால், ஹுலிகெம்மா கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்தனர். எனவே காணிக்கையும் அதிகரித்தது.