/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஒரு மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்? ஒரு மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்?
ஒரு மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்?
ஒரு மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்?
ஒரு மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்?
ADDED : மார் 27, 2025 05:22 AM
பெங்களூரு: “சட்டவிரோதமாக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும்,” என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே அறிவுறுத்தி உள்ளார்.
சட்டவிரோதமாக மரம் வெட்டுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகப்படுத்துவது தொடர்பாக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே நேற்று வனம், உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
அதிக எண்ணிக்கையில் மரங்களை வெட்டுவது மனிதர்களை கொலை செய்வது போன்றது அல்லது அதைவிட மோசமான செயலாகும். சட்டவிரோதமாக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கருணை காட்டக் கூடாது. இவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அபராத தொகையும் அதிகப்படுத்த வேண்டும்.
புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்தியில் மரங்களை பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக பூமியில் உள்ள மரங்களை பாதுகாக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் மிக பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும்.
இது தொடர்பாக மரங்கள் பாதுகாப்பு சட்டம் 1972ல் சில திருத்தங்களை மேற்கொள்ளவும். இதன் மூலம் மரங்களை சட்டவிரோதமாக வெட்டுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்க முடியும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.