/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் மழையால் சாலைகள் கடும் பாதிப்பு பெங்களூரில் மழையால் சாலைகள் கடும் பாதிப்பு
பெங்களூரில் மழையால் சாலைகள் கடும் பாதிப்பு
பெங்களூரில் மழையால் சாலைகள் கடும் பாதிப்பு
பெங்களூரில் மழையால் சாலைகள் கடும் பாதிப்பு
ADDED : செப் 07, 2025 02:30 AM

பெங்களூரு: பெங்களூரில் நேற்று இரவு பெய்த கனமழையால், நகரின் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.
வடக்கு ஆந்திராவின் கடலோர பகுதியில் ஏற்பட்டு உள்ள காற்று வளிமண்டல சுழற்சியால் கர்நாடகாவில் மழை பெய்து வருகிறது. பெங்களூரில் நேற்று மதியத்தில் இருந்து மிதமான மழை பெய்தது. இரவில் கனமழை பெய்தது.
சிவாஜிநகர், பொம்மனஹள்ளி, ஆர்.ஆர்.நகர், நாயண்டஹள்ளி, கெங்கேரி, ஹெம்மிகேபுரா, மைசூரு ரோடு, பனசங்கரி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். முக்கிய சந்திப்புகள், மேம்பால பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.