/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துமகூரு வரை மெட்ரோ நீட்டிக்க அரசிடம் அறிக்கை தாக்கல் துமகூரு வரை மெட்ரோ நீட்டிக்க அரசிடம் அறிக்கை தாக்கல்
துமகூரு வரை மெட்ரோ நீட்டிக்க அரசிடம் அறிக்கை தாக்கல்
துமகூரு வரை மெட்ரோ நீட்டிக்க அரசிடம் அறிக்கை தாக்கல்
துமகூரு வரை மெட்ரோ நீட்டிக்க அரசிடம் அறிக்கை தாக்கல்
ADDED : மே 16, 2025 10:12 PM

பெங்களூரு: மெட்ரோ ரயில் போக்குவரத்தை விஸ்தரிக்க, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, அரசுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ பச்சை நிற மெட்ரோ ரயில் பாதையை, மாதவராவில் இருந்து, துமகூரு வரை நீட்டிக்க அரசு ஆர்வம் காட்டுகிறது.
இதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி கடந்தாண்டே, பெங்களூரு மெட்ரோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
துமகூருக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவக்குவதில், துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உள்ளிட்டோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசின் உத்தரவுபடி, மெட்ரோ நிறுவனம் ஆய்வு நடத்த டெண்டர் அழைத்தது. ஹைதராபாத்தின் தனியார் நிறுவனம் டெண்டர் பெற்றது. ஆய்வை முடித்து மெட்ரோ நிறுவனத்திடம் அறிக்கை அளித்துள்ளது.
ஆய்வறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளோம். 56.6 கி.மீ., தொலைவிலான மெட்ரோ பாதையில், 25 நிலையங்கள் உட்கொண்ட திட்டம் இதுவாகும்.
மாநில அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், மத்திய அரசின் அனுமதிக்காக அறிக்கை அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.