/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கடலோர மாவட்டங்களுக்கு ஜூன் 14 வரை 'ரெட் அலெர்ட்' கடலோர மாவட்டங்களுக்கு ஜூன் 14 வரை 'ரெட் அலெர்ட்'
கடலோர மாவட்டங்களுக்கு ஜூன் 14 வரை 'ரெட் அலெர்ட்'
கடலோர மாவட்டங்களுக்கு ஜூன் 14 வரை 'ரெட் அலெர்ட்'
கடலோர மாவட்டங்களுக்கு ஜூன் 14 வரை 'ரெட் அலெர்ட்'
ADDED : ஜூன் 11, 2025 11:44 PM

பெங்களூரு: 'கடலோர மாவட்டங்களில் வரும் 14ம் தேதி வரை கனமழை பெய்யும்' என்று அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சிவப்பு எச்சரிக்கையும்; பெங்களூ நகரம் உட்பட எட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கர்நாடகாவில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. இந்நிலையில், நாளை வரை, 11 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது. இரண்டு நாட்கள் ஓய்வெடுத்த மழை, 10ம் தேதி இரவு முதல் மீண்டும் துவங்கியது.
பெங்களூரில் கனமழை பெய்ய துவங்கியது. இதில், நகரின் பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து ஓடியது. நேற்றிரவும் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதில், பெங்களூரு மெஜஸ்டிக், சிவானந்தா சதுக்கம், மல்லேஸ்வரம், சேஷாத்திரிபுரம், சிவாஜி நகர், டவுன் ஹால், கார்ப்பரேஷன் சதுக்கம், எம்.ஜி., ரோடு, பிரிகேட் ரோடு, கப்பன் பூங்கா, விதான் சவுதா, கஸ்துாரி பா சாலை, மல்லையா சாலை உட்பட பல இடங்களில் கனமழை பெய்தது.
சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பணி முடிந்து வீட்டுக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். இதனால் மாற்று பாதையில், வாகன ஓட்டிகள் சென்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் ஜூன் 12 முதல் 14ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளது.
ஜூன் 13ம் தேதி வரை பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், ராம்நகர், மாண்டியா, மைசூரு, பீதர், கலபுரகி, யாத்கிர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய உள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குடகு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், அங்கன்வாடி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
உத்தர கன்னடா மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா கூறியதாவது:
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. 24 மணி நேரமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவசர உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. 08382 - 229857, வாட்ஸாப் 94835 11015 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.
மழை தொடர்பான தகவல்கள் தேவைப்படுவோர், இங்கு தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளலாம். சமூக ஊடகங்களில் வரும் அதிகாரபூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்.
மேலும், கடலுக்குள் மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம். தாழ்வான பகுதிகள், ஏரிகள், நதிகள், கடற்கரை பகுதிகளுக்கு பொது மக்கள், குறிப்பாக குழந்தைகள் செல்வதை தவிர்க்கவும். சுற்றுலா பயணியர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மழை நேரத்தில் இடி தாக்க நேரிடும். எனவே, விவசாய நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபடாமல் தவிர்க்கவும். வெளியே செல்லும் போது மழை பெய்தால், பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
12_DMR_0011
சித்தாபுராவில் சாலையில் தேங்கிய மழைநீர்.
12_DMR_0012
சி.பி.ஐ., அலுவலகத்தில் இருந்து ஏர்போர்ட் செல்லும் சாலையில் தேங்கிய மழைநீர்.
12_DMR_0013, 12_DMR_0014
மைசூரில் தேங்கிய மழைநீரை கிழித்தபடி சென்ற அரசு பஸ். (அடுத்த படம்) மைசூரில் நேற்று மாலை கொட்டி தீர்த்த மழை.