
இங்கேயும் இறக்க வேண்டுமா?
பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம், கண்டிக்கத்தக்கது. துரதுஷ்டவசமானது. இதை கும்பமேளாவில் நடந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல. கும்பமேளாவில் மக்கள் உயிரிழந்தனர் என்பதால், இங்கேயும் இறக்க வேண்டுமா? பா.ஜ., மற்றும் காங்கிரஸ் என, இரண்டுமே ஊழலில் மூழ்கியுள்ளன. நடந்த அசம்பாவிதத்தில் அரசின் தவறை ஒப்புக்கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மகான் என்ற மனப்போக்கில் பேசுவது சரியல்ல. இரண்டு கட்சிகளும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.
கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, கிரிக்கெட் கமிட்டியினரே, ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
- பிரமோத் முத்தாலிக்,
ஸ்ரீராம சேனா தலைவர்