ADDED : ஜூன் 04, 2025 11:27 PM

பின்பக்க வாசல்
பா.ஜ.,விடம் எந்த கொள்கையும் இல்லை. அதிகார மோகத்தால் ஜாதிகளுக்கு இடையே சண்டையை துாண்டி விடுகிறது. கர்நாடக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால், 160 இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் என்று விஜயேந்திரா கூறுகிறார். இதற்கு முன்பு பா.ஜ., ஆட்சிக்கு பின்பக்க வாசல் வழியாக தான் வந்தனர். எதிர்க்கட்சி தலைவர்கள் அசோக், சலவாதி நாராயணசாமி தினமும் ஏதாவது ஒரு பொய் குற்றச்சாட்டு சொல்கின்றனர். அவர்கள் சொல்வதை மக்கள் நம்பவில்லை. அவர்கள் எப்போது உண்மையை பேசுவர் என்று காத்திருக்கிறேன்.
- திம்மாபூர்,
அமைச்சர், கலால் துறை.
திம்மாபூர்