ADDED : மே 12, 2026 06:57 AM

துமகூரு: தாய் இறந்த துக்கத்தில், மலையில் இருந்து குதித்து, பொதுப்பணித்துறை இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டார்.
துமகூரு டவுன் சத்தியமங்கலத்தில் வசித்தவர் மஞ்சுநாத் பிரசாத், 33. பாவகாடாவில் உள்ள பொது பணி துறை அலுவலகத்தில் இன்ஜினியராக பணியாற்றினார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கடந்த, 2024ல் மஞ்சுநாத் பிரசாத்தின் தாய் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். தாய் இறந்த பின், யாரிடமும் மஞ்சுநாத் பிரசாத் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.
நேற்று காலை கொரட்டகெரேவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அவர் தனது மொபைல் போன், வாட்ச், வீட்டு சாவியை கொடுத்தார். கொரட்டகெரேயில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி உள்ளது. பின்னர் வருகிறேன் என்று கூறி விட்டு சென்றார்.
ஆனால் நேராக தேவராயனதுர்கா மலைக்கு சென்ற அவர், மலை உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தாய் இறந்த துக்கத்தில் அவர் தற்கொலை செய்தது தெரிந்தது. கியாதசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
