Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'இ -பட்டா' முகாமில் பொதுமக்கள் ஆர்வம்

'இ -பட்டா' முகாமில் பொதுமக்கள் ஆர்வம்

'இ -பட்டா' முகாமில் பொதுமக்கள் ஆர்வம்

'இ -பட்டா' முகாமில் பொதுமக்கள் ஆர்வம்

ADDED : ஜூன் 29, 2025 11:01 PM


Google News
Latest Tamil News
எலஹங்கா: சொத்துகளுக்கு இ - பட்டா பெறும் மேளா நேற்று பேட்ராயனபுராவில் நடந்தது. இதில் பலரும் ஆர்வமாக பங்கேற்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்தனர்.

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 25 லட்சம் சொத்துகளில் 5.34 லட்சம் சொத்துகளுக்கும்; எலஹங்கா மண்டலத்தில் உள்ள 2,28,146 சொத்துகளில் 71,055 சொத்துகளும்; பேட்ராயனபுராவில் உள்ள 1,81,135 சொத்துகளில் 51,289 சொத்துகளுக்கும் இதுவரை இ - பட்டா வழங்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் சொத்தின் உரிமையாளர், அரசின் திட்டங்களில் சலுகைகளை பெற முடியும். எனவே, இ - பட்டா பெறுவது முக்கியமான ஒன்றாகும்.

பேட்ராயனபுராவில் உள்ள சஹாரி நகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று இ - பட்டா வழங்கும் மேளா நடந்தது. துணை முதல்வர் சிவகுமார், வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, மாநகராட்சி கமிஷனர் மஹேஸ்வர ராவ், மாநில அளவிலான உத்தரவாத திட்ட அமலாக்க ஆணைய தலைவர் ஹெச்.எம்.ரேவண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், எலஹங்கா மண்டலத்தை சேர்ந்த பலர், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

இந்த மேளா, இன்று எலஹங்கா மண்டல கூட்டுறவு நகர விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இ - பட்டா பெறுவதற்கு வார்டு அலுவலகங்கள் அல்லது 080 - 4920 3888 என்ற தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us