Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஸ்மார்ட் மீட்டரில் சாப்ட்வேர் இணைக்கப்படாததால் சிக்கல்

ஸ்மார்ட் மீட்டரில் சாப்ட்வேர் இணைக்கப்படாததால் சிக்கல்

ஸ்மார்ட் மீட்டரில் சாப்ட்வேர் இணைக்கப்படாததால் சிக்கல்

ஸ்மார்ட் மீட்டரில் சாப்ட்வேர் இணைக்கப்படாததால் சிக்கல்

ADDED : ஜூன் 17, 2025 08:07 AM


Google News
பெங்களூரு : முழுமையான தொழில் நுட்பத்துடன் பொருத்தாததால், புதிய மற்றும் தற்காலிக மின் இணைப்புக்காக பொருத்தப்படும் ஸ்மார்ட் மீட்டர்கள் சரியாக செயல்படாமல் நுகர்வோர் அவதிப்படுகின்றனர்.

தற்காலிக மற்றும் நிரந்தர மின் இணைப்பு பெறும் நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர்களை, பெஸ்காம் பொருத்துகிறது. ஸ்மார்ட் மீட்டர்களில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இது மின் அழுத்தத்தின் அளவு உட்பட, மற்ற விபரங்களை கண்காணிக்க உதவும் என, பெஸ்காம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மீட்டர்களை பொருத்துவதை கட்டாயமாக்கியதால், பலரும் கூடுதல் பணம் செலுத்தி சாதாரண மீட்டர்களை மாற்றுகின்றனர்.

ஆனால், தேவையான முன்னேற்பாடுகளை செய்யாமல் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை பெஸ்காம் கட்டாயமாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

புதிதாக பொருத்தப்படும் ஸ்மார்ட் மீட்டர்களில் தேவையான மென்பொருள் தொழில்நுட்பம் இல்லை. இதனால் ஸ்மார்ட் மீட்டர்கள், சாதாரண மீட்டர்களை போன்றே இயங்குகின்றன.

இத்தகைய மீட்டர்களை பொருத்துவதற்கு, அதிக கட்டணம் வசூலித்தது சரியல்ல என்றும் நுகர்வு மின்சார அளவை விட, அதிக யூனிட்டை காட்டுவதாகவும் நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, பெஸ்காம் நிர்வாக இயக்குநர் சுதாகர் கூறியதாவது:

தற்காலிக மற்றும் நிரந்தர மின் இணைப்பு பெறும் புதிய நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன. இவற்றில் இன்னும் மென்பொருள் இணைக்கவில்லை. இதற்காக தயாராகிறோம்.

மென்பொருள் தயாராக உள்ளது. விரைவில் வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட் மீட்டரில் இணைக்கப்படும்.

கொஞ்சம் கொஞ்சமாக மென்பொருள் இணைக்கப்படும். இந்த மென்பொருள் பல விஷயங்களுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us