/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆடி மாதத்தில் சாமுண்டி மலைக்கு தனியார் வாகனங்கள் செல்ல தடை ஆடி மாதத்தில் சாமுண்டி மலைக்கு தனியார் வாகனங்கள் செல்ல தடை
ஆடி மாதத்தில் சாமுண்டி மலைக்கு தனியார் வாகனங்கள் செல்ல தடை
ஆடி மாதத்தில் சாமுண்டி மலைக்கு தனியார் வாகனங்கள் செல்ல தடை
ஆடி மாதத்தில் சாமுண்டி மலைக்கு தனியார் வாகனங்கள் செல்ல தடை
ADDED : ஜூன் 13, 2025 11:17 PM
மைசூரு: கன்னட ஆடி மாதத்தின் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமுண்டி மலைக்கு தனியார் வாகனங்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கன்னட ஆடி மாதத்தில், மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரியை தரிசிக்க, வெள்ளிக்கிழமைகளில், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மஹாதேவப்பா தலைமையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், வழக்கம் போல், ஜூன் 27, ஜூலை 4, 11, 18 ஆகிய வெள்ளிக்கிழமைகளிலும், சாமுண்டீஸ்வரி பிறந்த நாளான ஜூலை 17ம் தேதியும் தனியார் வாகனங்கள், மலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அத்துடன் புதிதாக, 2,000 ரூபாய்க்கான சிறப்பு பாக்ஜேக் திட்டத்தையும்; 300 ரூபாய் சிறப்பு தரிசனம் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையை தொடர்ந்து, வார இறுதி நாட்களான சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் கூட பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.
எனவே, ஜூன் 27, 28, 29, ஜூலை 4, 5, 6, 11, 12, 13, 18, 19, 20 ஆகிய நாட்களிலும் தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்க, சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டு ஆணையம், மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை ஆகியவை இணைந்து முடிவெடுத்துள்ளன.