கைதிகள் மோதல் ரூ.1 லட்சம் பாதிப்பு
கைதிகள் மோதல் ரூ.1 லட்சம் பாதிப்பு
கைதிகள் மோதல் ரூ.1 லட்சம் பாதிப்பு
ADDED : மே 21, 2025 11:07 PM
தட்சிண கன்னடா: மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் நேற்று அளித்த பேட்டி:
மங்களூரு சிறையில் கடந்த 19ம் தேதி இரவு, 'ஏ' பிளாக்கில் இருந்த கைதிகள் சிலர், சமையல் அறையில் பணியாற்றிய விசாரணை கைதிகளை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இத்தகவல், சிறை எஸ்.பி., சுரேஷுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவரும், சிறை ஊழியர்களும், படுகாயம் அடைந்த விசாரணை கைதிகளை, அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதையறிந்த, 'பி பிளாக்' கைதிகள் கோபம் அடைந்து மறுநாள் மதியம், தங்கள் பிளாக்கில் இருந்த 10 கண்காணிப்பு கேமராக்கள், ஒயர்கள், மொபைல் போன் ஜாமர் ஆன்டெனாக்களை சேதப்படுத்தினர். இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். இது தொடர்பாக மங்களூரு நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.