Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை வைகாசி விசாகம் ஏற்பாடுகள் தீவிரம்

தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை வைகாசி விசாகம் ஏற்பாடுகள் தீவிரம்

தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை வைகாசி விசாகம் ஏற்பாடுகள் தீவிரம்

தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை வைகாசி விசாகம் ஏற்பாடுகள் தீவிரம்

ADDED : ஜூன் 07, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: பெங்களூரு காவல் பைரசந்திரா தொட்டண்ணா நகரில் உள்ள தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை 'வசந்த வைகாசி விசாகம்' நடக்கிறது.

பெங்களூரு காவல் பைரசந்திரா தொட்டண்ணா நகரில் பிரசித்தி பெற்ற தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

இந்த மலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு, துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர், பூஜித்து வந்த 'வேல்' சக்தி வாய்ந்தது. இதை அனைவரும் வழிபட்டனர். இந்த வேல் அருகில், முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இவரை வணங்கியவர்கள் அடைந்த பிரதிபலன் அளவிட முடியாதது. பணமும், புகழும் தேடி வரும் என அனுபவித்த பக்தர்கள் சொல்கின்றனர். முருகப்பெருமானிடம், தங்கள் கோரிக்கைகளை பக்தர்கள் தயக்கமின்றி சொல்வதற்காகவே, மூலஸ்தானத்தில் முருகனுக்கு சற்றுத் தள்ளி வள்ளி, தெய்வானையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

மனைவியுடன் நவக்கிரஹங்கள்


மனைவியுடன் அமைந்த நவக்கிரஹ சன்னிதியை வணங்கினால், சகல தோஷமும் நீங்கும். சித்தாந்தம் சொல்வது போன்று, 84 லட்சம் பிறப்புகளில் இருந்து விடுபட இக்கோவிலில் 84 படிகளை அமைத்துள்ளனர்.

படிப்பாதையில் இடும்பன் காவடி எடுக்கும் காட்சி; அவ்வையாருக்கு அருள் செய்யும் முருகன் சிற்பங்களும் உள்ளன.

இக்கோவிலில் வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் பிரசித்தி பெற்றவை.

நாள் முழுதும்


இத்தகைய பெருமை வாய்ந்த கோவிலில் சுப்பிரமணியர் அவதரித்த நாளான வைகாசி விசாகம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாளை காலை 6:30 மணி முதல் 9:00 மணி வரை சிறப்பு கணபதி ஹோமம்; பின்னர், கோவில் அடிவாரத்தில் உள்ள ஸ்ரீவிநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்து, கருடகம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது

காலை 10:30 மணிக்கு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மஹா மங்களாரத்தி காண்பிக்கப்படுகிறது. அதன் பின், வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் உத்சவம் நடக்கிறது.

பூஜைகள் அனைத்தும் கோவில் தர்மகர்த்தா எம்.முனிராஜு, கோவில் கமிட்டி தலைவர் கே.தயாளமணி முன்னிலையில் நடக்கிறது. மதியம் 1:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அனைத்து பூஜைகள், அன்னதானம் வழங்குவது கோவில் உறுப்பினர்கள் கே.சுப்பிரமணி, ஆர்.மாரி, விஜய் எனும் ஐ.சங்கர் குடும்பத்தினர் உபயத்தில் நடக்கிறது.

தொடர்புக்கு


மேலும் விபரங்களுக்கு, 99729 99663, 98453 56637, 97383 42151 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.முனிராஜு, தலைவர் கே.தயாளமணி, பொது செயலர் டி.முனேகவுடா, உதவி தலைவர்கள் ஆர்.பெருமாள், ஜனார்தன், பி.மோகன், பொருளாளர் மகேந்திரன், உதவி செயலர் சேகரன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

ஆடி கிருத்திகை

நடப்பாண்டு ஆடி கிருத்திகை ஜூலை 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 18ல் சுமங்கலி பூஜை, 19ல் பரணி கிருத்திகை, 20ல் ஆடிக்கிருத்திகை நடக்கிறது. நான்கு நாட்கள் கோலாகலமாக நடக்கும் இவ்விழாவில் பக்தர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கோவில் கமிட்டியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us