Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாயமான வன ஊழியர் திணறும் போலீசார்

மாயமான வன ஊழியர் திணறும் போலீசார்

மாயமான வன ஊழியர் திணறும் போலீசார்

மாயமான வன ஊழியர் திணறும் போலீசார்

ADDED : ஜூலை 02, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
சிக்கமகளூரு: மாயமான வனத்துறை ஊழியரை பற்றி எந்த துப்பும் கிடைக்காமல், போலீசார் திணறுகின்றனர்.

குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின் காலுார் கிராமத்தை சேர்ந்தவர் சரத், 33; வனத்துறையில் பாதுகாவலர். இவருக்கு சிக்கமகளூரு மாவட்டம், கடூரில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

கடூரு, சகராயபட்டணாவின் நீலகிரி பிளான்டேஷனில், ஜூன் 24ம் தேதி பணிக்கு சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. எங்கு போனார், என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. அவரது பைக் மற்றும் ஜெர்கின் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' ஆகி உள்ளது. கலக்கமடைந்த குடும்பத்தினர், சகராயபட்டணா போலீசாரிடம் புகார் அளித்தனர்.

போலீசாரும், வனத்துறையினரும் ஒரு வாரமாக இரவு, பகல் பாராமல் சரத்தை தேடியும், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. வனத்தின் உட்பகுதியில் தொடர்ந்து தேடுகின்றனர். அவருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என, குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us