/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் மழைநீர் உபகரணங்கள் சேதமானதால் வீரர்கள் ஆதங்கம் கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் மழைநீர் உபகரணங்கள் சேதமானதால் வீரர்கள் ஆதங்கம்
கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் மழைநீர் உபகரணங்கள் சேதமானதால் வீரர்கள் ஆதங்கம்
கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் மழைநீர் உபகரணங்கள் சேதமானதால் வீரர்கள் ஆதங்கம்
கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் மழைநீர் உபகரணங்கள் சேதமானதால் வீரர்கள் ஆதங்கம்
ADDED : மே 22, 2025 05:04 AM

பெங்களூரு: பெங்களூரு கன்டீரவா விளையாட்டு அரங்கம், உள் விளையாட்டு அரங்குக்குள் மழைநீர் புகுந்தது. அங்கிருந்த விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்ததால், வீரர்கள் கோபம் அடைந்து உள்ளனர்.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுபோன்று, பெங்களூரு கன்டீரவா வெளிப்புற கால்பந்து மைதானம், தடகள பாதை, ஜிம்னாஸ்டிக் மைதானம், மைதானத்துக்குள் நுழையும் வாயில்கள் உட்பட பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் விளையாட்டு வீரர்கள் மைதானத்துக்குள் நுழைய முடியாமல் தவித்தனர். சில வீரர்கள், மழைக்கு நடுவிலும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இதுபோன்று உள்விளையாட்டு அரங்கிலும் மழைநீர் தேங்கியது. உள்ளே இருந்த விளையாட்டு உபகரணங்கள் பாழானது. பூப்பந்து, சதுரங்கம் உட்பட பல விளையாட்டு பிரிவுகளிலும் தண்ணீர் தேங்கியது. கோப்புகள் சேதமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அரங்கத்தை கட்ட கோடிக்கணக்கில் செலவிட்டும், ஒவ்வொரு முறை மழை பெய்தாலும், மைதானத்துக்குள் தண்ணீர் தேங்குவது வழக்கமாகி விட்டது. இம்முறை மைதானம் ஏரி போன்று காட்சி அளிக்கிறது.
மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து, விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்ததால், விளையாட்டு வீரர்கள் கோபம் அடைந்து உள்ளனர்.
இதையறிந்த விளையாட்டு துறை கமிஷனர் சேத்தன் சம்பவ இடத்துக்கு வந்தார். அவரிடம் தங்கள் ஆதங்கத்தை வீரர், வீராங்கனைகள் வெளிப்படுத்தினர். அவர்களை சமாதானப்படுத்தினார். பின், மோட்டார் பம்ப் வரவழைத்து, தண்ணீர் வெளியேற்றப்பட்டது.