/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தர்மஸ்தலாவில் மீண்டும் தோண்ட கோரிய மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு தர்மஸ்தலாவில் மீண்டும் தோண்ட கோரிய மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தர்மஸ்தலாவில் மீண்டும் தோண்ட கோரிய மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தர்மஸ்தலாவில் மீண்டும் தோண்ட கோரிய மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தர்மஸ்தலாவில் மீண்டும் தோண்ட கோரிய மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : செப் 16, 2025 05:20 AM
பெங்களூரு: தர்மஸ்தலாவில் மீண்டும் பள்ளம் தோண்ட எஸ்.ஐ.டி.,க்கு உத்தரவிட கோரிய மனு மீதான விசாரணையை 18ம் தேதிக்கு, உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலா வழக்கில் பொய் புகார் அளிக்கப்பட்டது தெரிந்ததால், தர்மஸ்தலாவில் பள்ளம் தோண்டும் பணிகளை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு நிறுத்தி வைத்துள்ளது. இந்த வழக்கில் எஸ்.ஐ.டி.,யால் விசாரிக்கப்பட்ட விட்டல் கவுடா, பங்களாகுட்டா வனப்பகுதியில் நிறைய எலும்புக் கூடுகளை பார்த்ததாக கூறி வீடியோ வெளியிட்டார்.
இதையடுத்து தர்மஸ்தலாவை சேர்ந்த பாண்டுரங்க கவுடா, துக்காராம் கவுடா ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தர்மஸ்தலாவில் மீண்டும் பள்ளம் தோண்ட, எஸ்.ஐ.டி.,க்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறி இருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா நேற்று விசாரித்தார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் தீபக் கோஸ்லா வாதிடுகையில், ''தர்மஸ்தலா வழக்கின் புகார்தாரர் அடையாளம் காட்டிய சில இடங்களில் இன்னும் பள்ளம் தோண்டப்படவில்லை.
தற்போது விட்டல் கவுடா என்பவர், பங்களாகுட்டாவில் எலும்புக்கூடுகளை பார்த்ததாக கூறி உள்ளார். இதனால் பள்ளம் தோண்டும் பணிகளை மீண்டும் துவங்க, எஸ்.ஐ.டி.,க்கு உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
அரசு தரப்பு வக்கீல் ஜெகதீஷ் வாதிடுகையில், ''தர்மஸ்தலாவில் மீண்டும் பள்ளம் தோண்ட வேண்டும் என்று, எஸ்.ஐ.டி.,யிடம், மனுதாரர்கள் சார்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. அவர்கள் கோரிக்கை அடங்கிய விண்ணப்பத்தை அரசு தரப்பிடம் கொடுக்க வேண்டும்,'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான அடுத்த விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 'மனுதாரர்கள், அரசு தரப்புக்கு விண்ணப்பம் வழங்க வேண்டும், மனுதாரர்கள் வழங்கும் விண்ணப்பம் தொடர்பான தகவலை அரசு சேகரித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதி நாகபிரசன்னா உத்தரவிட்டார்.